ஆதரவாளர்கள்

செவ்வாய், 14 மே, 2013

கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே உச்சமான கவர்ச்சி:

கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே உச்சமான கவர்ச்சி காட்டி நடித்துள்ளதாக படங்கள்;

கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே உச்சமான கவர்ச்சி காட்டி நடித்துள்ளதாக செய்தி;
ரஜினிகாந்த் அவர்கள் தன்னை நல்ல நடிகனாக நல்ல ஆன்மீக வாதியாக நல்ல பண்பாளராக தன்னுடைய ரசிகர்கள் வேலை இல்லாமல் இருக்கக் கூடாது முதலில் வீடு அப்புறம் தான் எல்லாம் என்று நல்ல ஆலோசனைகள் வழங்கும் ஆலோசகராக ரஜினி ரசிகர் என்ற முறையில் அறிவேன்

ஆனால் மேற்கண்ட தகவல் எனக்கு மிகுந்த மன உளைச்சல் தருகின்றது
காரணம்

1) தலைவர் படம் முன்பெல்லாம் சந்தோசம் வரும் நல்ல கருத்துக்களுடன் நல்ல பொழுது போக்கும் இருக்கும் கவர்ச்சி என்று பிரித்து பார்க்க முடியாத அளவில் கதையுடன் ஒன்றி இருக்கும். ஒரு தாயின் சபதம் படம்  பார்த்து அன்றுமுதல் இன்று வரை என்னுடைய அம்மா எது கேட்டாலும் செய்து கொடுக்கின்றேன்.
கவர்ச்சிக்கு முக்கியத் துவம் கொடுத்தால் தான் ரஜினி படம் ஓடுமா அப்படி நடிகையை கவர்ச்சியாக காட்டித் தான் தலைவர் படத்தை ஓட்ட வேண்டுமா  சமீபத்திய படங்கள் சொல்லும் செய்தி என்ன ரசிகரான எனக்கு என்ன சொல்கின்றார்

2) தலைவர் நடிக்கும் கோச்சடையான் படத்தை இயக்கும்  இயக்குனர் தலைவரின் மகள் தன்னுடைய மகள் இயக்கும் படத்தில் தன்னுடைய மகளுக்கு முன்னாள் நின்று அதீத கவர்ச்சி உடையில் உள்ள நடிகையுடன் நெருக்கமாக நடிக்க முடிந்தது என்றால் தனது ரசிகர்களுக்கு  என்ன சொல்ல வருகின்றார்

தான் பெற்ற பெண்ணே அப்பா இப்படி கட்டிப்பிடி இப்ப பேசு ரோமான்ஸ்  இப்படி செய்யணும் என்று சொல்லித்தரும் அதை செயலாற்றும் .................

5வயது பெண்ணை 7வயது 8 வயது 10 வயது கொண்ட மூன்று சிறுவர்கள் வன்புணர்வு செய்துள்ளதாக சமீபத்திய செய்தி பாருங்கள் நாடு எங்கே சென்றுகொண்டு இருக்கின்றது இளைஞர்கள் எதிர்காலம் என்ன

 தயாரிப்பாளர்களே சற்று சிந்தியுங்கள் தலைவர் படத்திலாவது கவர்ச்சி காட்டாமல் தயாரிக்கலாமே. பாலியல் கொலை பாலியல் துன்புறுத்தல் என்று தினமும் செய்தி வரும் இன்றைய நிலையில் ரஜினி படம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பது சரியா? தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணம் பல மடங்காக திரும்ப எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கலாம் தலைவர் ஒரு வார்த்தையில் அதை மாற்றலாமே செய்வாரா?

அதாவது தொழில் என்று மட்டும் யாரும் சொல்லிவிடாதீர்கள் தொழில் என்பதற்காக முன்னாள் இருப்பது தன்னுடைய மகள் என்பது மறைந்துவிடுமா  கூச்சமாக இருக்காதா?  பிழைப்புக்காக தமிழகம் வந்தவர் தானே தமிழர்கள் கலாச்சாரம் எப்படிக் கெட்டால் என்ன தமிழ் பிள்ளைகள் எப்படிப் போனால் என்ன பணம் மட்டுமே பிரதானம் என்று இருக்கின்றாரா இவரை நம்பியது தமிழ் ரசிகர்கள் குற்றமா  இவருக்கா ரசிகராக இவ்வளவு காலம் இருந்துள்ளேன் வெட்கப்படுகின்றேன்.

என்ன இருந்தாலும் தலைவர் தான் ஆனாலும் தலைவர் படத்திற்கு கவர்ச்சி தேவையா கவர்ச்சி இருந்தால் தான் தலைவர் படம் ஓடும் என்றால் தலைவர் நடிப்பு எதற்கு?

 தலைவரின் படம் பற்றிய சமீபத்திய செய்தியைப் படித்து வருத்தப் பட்ட நான் இனி ரஜினி படமே பார்க்கக் கூடாது  என்ற முடிவை இப்போது எடுத்துளேன் உண்மையான தமிழர்கள் நாடு நிலையாளர்கள் நான் எடுத்த முடிவு பற்றிய கருத்துக்களை பின்னூட்டத்தில் இடலாம்.

9 கருத்துகள்:

வருண் சொன்னது…

கோச்சடையான் இல்லையா படம் பெயர்?

***தலைவரின் சமீபத்திய செய்தியைப் படித்து வருத்தப் பட்ட நான் இனி ரஜினி படமே பார்க்கக் கூடாது என்ற முடிவை இப்போது எடுத்துளேன் உண்மையான தமிழர்கள் நாடு நிலையாளர்கள் நான் எடுத்த முடிவு பற்றிய கருத்துக்களை பின்னூட்டத்தில் இடலாம்.***

நல்ல முடிவு! :)

தல: படத்தைப் புறக்கணிப்பது உங்கள் உரிமை! அதை எவன் என்ன சொல்ல முடியும்? :)

Jayadev Das சொன்னது…

ரஜினியை வெறுப்பவர்கள் அவர் மீது இனம் புரியாத வெறுப்பு கொண்டிருப்பவர்கள், அவர் எது செய்தாலும் தூற்ற நினைப்பவர்கள், அவர் பெற்று வரும் வெற்றிகளால் வயிறு வெந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் சொல்லிக் கொள்வது....."நானும் ரஜினி ரசிகன்தான்.......ஆனால் இப்ப மாறிட்டேன்........".

Jayadev Das சொன்னது…

"கோச்சடையான்" என்பதை "கொச்சடையான்" என்று கொச்சைப் படுத்துவது நியாயமா?

வருண் சொன்னது…

Actually I figured that he PURPOSELY calling that "கொச்சடையான்" and getting some sadistic pleasure out of it. He also calls Rajni as "thalaivar" and pretending as if he is (was?) a Rajni fan. He must be completely lacking conscience or whatsoever it means!

I dont know WHY ALL THESE DRAMA??? and why all these dishonest approach are necessary for a person who claims that he is an INDIAN PATRIOT or whatever?

It only brings down quality of "Bala Subramanian" the great Indian patriot as he is giving an opportunity for others to call him as a LIAR or a CHEATER!

Honesty is the best policy, B S. You have all the right to HATE Rajni without doing all these drama and bullshit!

Nest time be honest to at least yourself if not for others!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எல்லாம் 'டப்பு' செய்யும் மாயம்...!

VOICE OF INDIAN சொன்னது…

தங்களது கருத்திற்கு நன்றி தோழரே

நான் சுயமாக தொழில் செய்து வருகின்றேன் ஆகவே பிழைப்புக்கு எனக்கு வலி இருக்கின்றது ஆகவே தவறான பிரச்சாரம் செய்து பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ஒரு வேலை நான் உணர்ந்தது போல் காலம் உங்களுக்கு உணர்வு ஊட்டலாம்

சூப்பர்ஸ்டார் படம் வந்தால் தவறாமல் பார்ப்பேன் என்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்து படம் பார்க்க வைத்தவன் நான் அவரது முதல் படமான அபூர்வ ராகங்கள் 1975 வெளிவந்த படம் பார்த்திருக்கின்றீரா நான் பார்த்திருக்கின்றேன் மூன்று முடுச்சு இரண்டாவது படம் 1976 பார்த்தீரா அவர் நடித்த 6 ஆவது படம் புவனா ஒரு கேள்விக்குறி 1977 வெளிவந்த படம் பார்த்திருக்கின்றீரா அப்படத்தைப் பாரும் கவர்ச்சிக்கும் கதைக்கும் எப்பாடு ஒன்று படுகின்றது என்று 1978 வெளிவந்த பைரவி பாரும் அன்னை ஒரு ஆலயம் 1979 வெளிவந்த படம் பாரும்கள் 1981 இல் வெளிவந்த தில்லுமுல்லு குறும்பு பாருங்கள் ,அதே ஆண்டில் வந்த ராணுவ வீரன் அன்புள்ள ரஜினிகாந்த் 1984 என்னமாதிரி செய்தி சொல்ல்கிறது படம் தெரியுமா தலைவரின் 75 ஆவது படமான குரு சிஷ்யன் பார்த்தல் புரியும் 1989 வெளிவந்த மாப்பிள்ளை படம் பார்த்து கை தட்டாதவர்களே இருக்க முடியுமா அநியாயங்களை தட்டிக் கேட்க சமுதாய சிந்தனை ஊட்டும் மனிதன் 1987 வந்ததே 1991 இல் வெளியான தர்மதுரை யஜமான் உழைப்பாளி அருணாச்சலம் அந்த படங்களில் ரஜினியை ரசித்தவன் பாட்சா படம் பார்த்து பொறுமையைக் கடைபிடிப்பவன் ஆனால் 100 வது படமான சிவாஜியில் தேவையற்ற கவர்ச்சி ஆரம்பமாகி அது தொடர்வதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இளைஞர்கள் என்ன கவர்ச்சியை மட்டுமே பார்ப்பவர்களா அரை குறை ஆடையில் நடிகை வந்தால் தான் பார்பார்களா
அப்படி என்றால் இளைஞர்கள் இளிச்சவாயர்களா நல்வழி காட்ட வேண்டாம் இளைஞர்கள் மனதில் நஞ்சை விதைக்க வேண்டாம் என்கிறேன் பதில் அளித்தால் மேலும் பேசலாம் தோழரே நட்புடன் பாலசுப்ரமணியன்

நீங்க ரஜினி படங்களை விரும்பி ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் என்பது உண்மைதான் என்பதை உணர முடிகிறது பின்னர் நீங்கள் ஏன் அவரது படங்களை வெறுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதில் உள்ள நியாயத்தையும் உணர முடிகிறது. நீங்கள் ரஜினி ரசிகர் ஆனால் கண்மூடித்தனமான ரசிகர் இல்லை. உங்களைப் போன்றவர்களைப் பார்ப்பது அரிது....... Good!!

வருண் சொன்னது…

உங்க நிலைப்பாட்டை தெளிவு படுத்தியமைக்கு நன்றி! இதைப் பத்தி நெறையா பேசலாம். ஆனால் நேரமின்மை காரணமாக இத்துடன் நிறுத்திக்கிறேன், பாலா! :)