ஆதரவாளர்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

இணையம் மூலம் மத்திய தகவல் கமிஷனுக்கு விண்ணப்பம் அனுப்புதல்


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி இணையம் மூலம் மத்திய தகவல் கமிஷனுக்கு விண்ணப்பம் அனுப்புதல்

உங்களுக்கு மத்திய பொது நிறுவனங்களிலிருந்து தகவல்கள் பெற வேண்டுமானால் மட்டுமே மத்திய தகவல் கமிஷனுக்கு வேண்டுகோள் அல்லது குறைகளை தெரிவிக்க வேண்டும்.
எப்பொழுது இணையம் மூலம் மத்திய தகவல் கமிஷனுக்கு குறைகளை தெரிவிக்கலாம்?
  • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பொது தகவல் அதிகாரி நியமிக்கப்படாது நிலையில் அல்லது மத்திய துணை பொது தகவல் அதிகாரி உங்கள் விண்ணப்பித்தை ஏற்றுக்கொள்ளாத நிலை போன்ற காரணங்களாலும் அல்லது மத்திய பொது தகவல் அகிகாரி, மத்திய தகவல் கமிஷனுக்கு உங்கள் விண்ணப்பித்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பிரிவ (1) பிரிவு 19 ன் கீழ் அனுப்பவில்லையென்றாலும்
  • மத்திய பொது தகவல் அதிகாரி இச்சட்டம் மூலம் தகவல் பெறும் உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலோ
  • குறிப்பிட்ட கால அளவுக்குள் உங்களுக்கு நீங்கள் கேட்ட தகவல் கொடுக்கப்படாமல் இருந்தாலோ அல்லது பொது தகவல் அதிகாரி உங்கள் விண்ணப்பத்திற்கு பதிலளிக்காமல் இருந்தாலோ
  • முறையான காரணமின்றி மத்திய பொது தகவல் அதிகாரி ஒரு குறிப்பிட்ட தொகையினை கட்டணமாக செலுத்தச்சொன்னாலோ
  • இச்சட்டத்தின் கீழ் மத்திய பொது தகவல் அதிகாரி நீங்கள் கேட்ட தகவலை அரைகுறையாகவோ அல்லது தவறாகவோ தெரிவித்ததாக நீங்கள் நம்பினாலோ
  • நீங்கள் கேட்ட தகவலுக்கு, மத்திய பொது தகவல் அதிகாரி பதில் கொடுத்து நீங்கள் திருப்தி அடையாமல் இருந்தாலோ
பிடிஎப் அல்லது ஜேபிஜி அல்லது ஜிப் முறையில் தேவையான ஆவணங்கள்
  • வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் இருப்பதற்கான சான்றிதழ் (நீங்கள் கட்டணவிலக்கு கோரினால்)
  • வயதுக்கான சான்றிதழ் ( நீங்கள் மூத்த குடிமகனாக இருப்பின்)
  • ஆரோக்கிய சான்றிதழ் (நீங்கள் மாற்றுத்திறனுடையவராக இருப்பின்)
  • உங்களுடைய வழக்குக்காக ஏதேனும் விவரங்கள் தேவைப்படின் அதற்கான சான்றிதழ்கள்
  • எல்லா ஆவணங்களும் பிடிஎப் அல்லது ஜேபிஜி அல்லுது ஜிப் வடிவமாக இருக்கவேண்டும்
  • நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 2 MB-க்கு மேல் இருக்கக்கூடாது
இணைய விண்ணப்பத்தை பரிசீலனை செய்தல்
  • இணையம் மூலம் விண்ணப்பிக்க விரும்பினால் இந்த இணைய தள முகவரிக்கு கொடுக்கவும் http://rti.india.gov.in/rti_direct_complaint_lodging.php )
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன் “Save as Draft/ Submit” எனும் பொத்தானை அழுத்தவும்
  • விண்ணப்பம் டிராப்ட் ஆக பதிவானவுடன் உங்களுடைய விண்ணபத்திற்கென்றே ஒரு குறிப்பிட்ட அடையாள எண் வழங்கப்படும்
  • உங்களுடைய விண்ணப்பத்தை ‘Save as Draft’ ஆக சமர்ப்பித்தால், கடைசியாக சமர்ப்பிப்பதற்கு முன்பு உங்களுடைய விண்ணப்பத்தை திருத்தியமைத்துக் கொள்ளலாம்
உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையினை அறிந்துகொள்ளுதல்
  • விண்ணப்பத்தினை பதிவு செய்தவுடன் அந்த விண்ணப்பத்தின் நிலையினை இணையம் மூலம் அறிந்துகொள்ளலாம்
  • உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ள http://rti.india.gov.in/rti_check_request_status.php?cat=compl செல்லவேண்டும்.

கருத்துகள் இல்லை: