விடியல் - தகவல் சேவை அளிப்போர்
நோக்கம்
கிராமப்புறச் சமுதாயத்தின் பலவீனமான பகுதிகளை ஐ.சி.டி. உதவியின் மூலம் அதிகாரம் பெறச் செய்வது. வி.ஐ.எஸ்.பி மையம், ஐ.சி.டி.யின் மூலம் எளிதில் கிடைக்கத்தக்க பல சேவைகளை வழங்குகிறது, முக்கியமாக விவசாயப் பொருள்களின் விலை, ஜோதிடம் பற்றிய தகவல், கிராமப்புற சந்தை இடங்கள், திருமணச் சேவைகள், கல்விச் சேவைகள், சுகாதார நலச் சேவைகள், குறைகள் களைதல், அரசாங்க விண்ணப்பங்களை ஏற்பாடு செய்தல் போன்றவை. பயனாளருக்குத் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவ மனைகளில் பயன்படுத்தும்படியாகத் தள்ளுபடிக் கூப்பன்கள் தரப்படுகின்றன. இன்னும் பிற சேவைகள், இணையத்திலிருந்து தொலைபேசி மற்றும் அடிப்படைக் கணினிக் கல்வி வி.ஐ.எஸ்.பி. சமுதாய மறுமலர்ச்சித் தொண்டர்களால் முதல்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் ஆறு கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
பொருள்
ஏழைப் பெண்கள் பொருளாதார வலிமையைப் பெறுவதை நோக்கமாக் கொண்டு ஏ.எஸ்.ஏ. கிராம விடியல் வருவாய் சார்ந்த பொருள்களின் கலவையைத் தருகிறது. எதையும் அடமானமாகக் கோராமல் கடன் பொருள்கள், குறிப்பிட்ட இடைவெளியில் உறுப்பினர்களுக்குத் தரப்படுகிறது. ஒவ்வொரு கடன் சுழற்சிக்குப் பிறகு, கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது. ஏ.எஸ்.ஏ - ஜி.வி. தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீட்டைத் தருகிறது. நிதிப் பொருள்கள் தவிர்த்த ஏ.எஸ்.ஏ - ஜி.வி ஏழைகளின் சமூக நலத்தை முன்னிட்டு, பல்வேறு கடன்கள் மற்றும் கடன்கள் தாண்டிய சேவைகள் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடன்கள்
பொதுக் கடன் - ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், தொடக்கத்தில் செய்ய வேண்டிய முதலீட்டிற்கான பணத்தைச் சம்பாதிக்கும் வகையில் ஏழைப் பெண் தொழில் முனைவோர்க்கு ஏ.எஸ்.வி - ஜி.வி. சிறிய கடன் தொகைகளை எதையும் அடமானமாகக் கோராமல் கடன்களைத் தருகிறது. இந்தக் கடன்கள் ஐந்து உறுப்பினர் குழுவில் இருக்கும் ஒரு பெண்ணுக்குத் தரப்படுகிறது. பிற நான்கு உறுப்பினர்களும், கடன் வாங்கியவருக்கு உத்தரவாதம் அளிப்பவர்களாகச் செயல்படுவார்கள். கடன் திரும்பிச் செலுத்துதல், வாரவாரம் நடக்கும் மையச் சந்திப்புகளில் வசூலிக்கப்படும் இந்தச் சந்திப்பை ஏ.எஸ்.ஏ - ஜி.வி யின் கள மேலாளர்கள் நடத்துவார்கள்.
பருவ காலக் கடன்-. ஃபோகஸ் குரூப் விவாதத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டது. தொழில் முனைவோர் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளரிடம் திருப்தி பற்றிய சர்வே எடுக்கப்பட்டது. இத்திட்டம், ஏ.எஸ்.ஏ - ஜி.வி உறுப்பினர்களுக்கு, முக்கியத் தருணங்களின்போது, அதாவது முக்கியமான பண்டிகைகளின்போது (தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல்) பணம் கடனாகப் பெறுவதற்கான வழிமுறை இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது. பண்டிகைகள் தவிர்த்த, அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படும் சமயங்களில் இந்த வசதி செய்யப்பட வேண்டும்.
பருவக்காலக் கடன், தீபாவளி, கிறிஸ்துஸ், பொங்கல் போன்ற சமயத்தில் முந்தைய கடனைச் சரியாகத் திரும்பிச் செலுத்துபவருக்கும் மையச் சந்திப்புகளுக்குச் சரியாக வருபவர்களுக்கும் தரப்படுகிறது. அத்தகைய உறுப்பினர்களுக்கு இன்னும் பிற முக்கியமான பண்டிகைகளின்போதும் மற்றும் பள்ளி அட்மிஷன்களின்போதும் பண்டிகைகளில் போதும் மற்றும் பள்ளி அட்மிஷன்களின் போதும் தொடர்ந்து கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக