ஆதரவாளர்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

உச்ச நீதிமன்றத்தில் இணைய வழி வழக்கு தாக்கல்


உச்ச நீதிமன்றத்தில் இணைய வழி வழக்கு தாக்கல்

இந்தியாவின் உச்ச நீதிமன்றமும்இணையதள நிர்வாகம் மூலமாகத் தனது சேவைகளை இந்தியக் குடிமகன்களின் வீடுகளுக்கே எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது சம்மந்தமாக அக்டோபர் 2, 1996ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் இணையதளம் மூலமாக வழக்கைத் தாக்கல் செய்யலாம் என்ற நடைமுறையை அமலுக்குக் கொண்டுவந்தது. வீட்டில் இருந்தபடியே வலைதளம் மூலமாக வழக்கு தாக்கல் செய்ய இது மிகவும் எளிய வழியாகும். இணையதளம் வலையகம் மூலமாக வழக்கு தாக்கல் செய்ய எந்த வழக்கறிஞரின் உதவியும் தேவையில்லை. இந்தச் சேவையை சாதாரண குடிமகனிலிருந்துவழக்கறிஞர் வரை யார்வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் எவரும்http://tempweh97.nic.in/scefiling/login.html  வலைவாசலில் நுழைந்து,தனது பெயரைஉபயோகிப்பாளர் என்ற பகுதியின் கீழ் பதிவு செய்து கொண்டுவழக்கு தாக்கல் செய்யலாம்.
இந்தச் சேவையைச் செய்யபின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • உச்சநீதிமன்றத்தின் இணையகம் மூலம் முதல் முறையாக வழக்குத் தாக்கல் செய்பவர்கள்தங்களது பெயரை உபயோகிப்பாளர் கையொப்பப் பகுதியில் பதிவுசெய்ய வேண்டும்
  • இணையகம் மூலமாக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமானால்அவர்அதிகாரப்பூர்வமான வழக்கறிஞராகவோஅல்லது வழக்குத் தொடரும் நபராகவோ மட்டுமே இருக்க வேண்டும்.
  • நீங்கள் பதிவு பெற்ற வழக்கறிஞராக இருந்தால் மட்டுமேவழக்கறிஞர் என்றவிருப்பத் தேர்வு இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடர்பவரே தனது பெயரை அதற்காண இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • முதல் முறையாகப் பதிவு செய்யும்போதுஅவசியமான தகவல்களான,விலாசம்தொடர்பு கொள்ள ஏதுவான விவரங்கள்இணையக மெயில் அடையாளம்போன்றவைகள் பதிவு செய்வது அவசியம்.
  • தொழில்முறை வழக்கறிஞர் அவரது சங்கேத எண்ணை (பதிவுபெற்ற வழக்கறிஞராக இருந்தால்) இணையதள நுழைவு சொல்லை  குறிப்பிட வேண்டும். தனிநபராகசொந்தப் பொறுப்பில் வழக்குத் தாக்கல் செய்பவர் அவரது நுழைவு சொல்லை புதிதாக உருவாக்கி நுழைவுக் கட்டத்தில் குறிப்பிட வேண்டும். இதையடுத்துதேவையான விவரங்கள் பதிவுசெய்யப்பட்டவுடன்நுழைவு சொல் மற்றும் ரகசியகச் சொல் சேர்க்கப்படும்.
  • இவ்வாறாக வெற்றிகரமாக இணையதளத்தில் நுழைந்தவுடன்,பொறுப்பாகாமை அறிவிப்புகணினித் திரையில் தோன்றும்
  • "இந்த அறிவிப்பின் விவரத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்ற குறியீட்டை   தேர்வு செய்தவுடன்அடுத்த நிலைக்கு செல்லலாம். "இதற்கு நான் ஒப்பவில்லை" என்ற பதிலைத் தேர்வு செய்யும் பட்சத்தில்மறுபடியும் நுழைவு பக்கத்திற்கு சென்று விடும்.
  • அடுத்த கட்டமாகஉபயோகிப்பாளர்தனது வழக்கின் விவரங்களைக் கணினியில் பதிவுசெய்துவழக்கு தாக்கல் செய்யலாம்.
  • 'புதிய வழக்கு’ என்ற விருப்பநிலை குறியீட்டை தேர்வு செய்வதன் மூலம் புதிய வழக்கைத் தாக்கல் செய்ய முடியும்.
  • திருத்தம்’ என்றே தேர்வுக் குறியீடு உபயோகித்துஏற்கனவே தாக்கல்செய்து முடித்த வழக்கு விவரங்களில் மாறுதல்கள் செய்ய முடியும். அதே சமயத்தில் நீதிமன்றக் கட்டணத்தைக் கட்டுவதை துவங்காதவரை  திருத்தங்கள் செய்யலாம்.
  • நீதி மன்றக் கட்டணம் கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த முடியும்
  • கணினி மூலமாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விவரங்களில் தவறுகள் இருப்பின்உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம்சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கோ அல்லது வழக்கைப் பதிவு செய்த தனி நபருக்கோஅவைகளைச் சுட்டிக்காட்டி இ-மெயில் மூலம் அனுப்பப்படும்.
  • மேலும் உதவி தேவைப்பட்டால் ‘உதவி’ என்கிற விருப்பத் தேர்வுக் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
  மேலும் விவரங்களுக்கு -http://tempweh97.nic.in/scefiling/login.html
வழக்கு நிலவரம்
உச்ச நீதிமன்றத்தில் இணையம் மூலம் வழக்குப் பதிவு செய்தல்

இணையம் மூலம் மத்திய தகவல் கமிஷனுக்கு விண்ணப்பம் அனுப்புதல்


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி இணையம் மூலம் மத்திய தகவல் கமிஷனுக்கு விண்ணப்பம் அனுப்புதல்

உங்களுக்கு மத்திய பொது நிறுவனங்களிலிருந்து தகவல்கள் பெற வேண்டுமானால் மட்டுமே மத்திய தகவல் கமிஷனுக்கு வேண்டுகோள் அல்லது குறைகளை தெரிவிக்க வேண்டும்.
எப்பொழுது இணையம் மூலம் மத்திய தகவல் கமிஷனுக்கு குறைகளை தெரிவிக்கலாம்?
  • தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பொது தகவல் அதிகாரி நியமிக்கப்படாது நிலையில் அல்லது மத்திய துணை பொது தகவல் அதிகாரி உங்கள் விண்ணப்பித்தை ஏற்றுக்கொள்ளாத நிலை போன்ற காரணங்களாலும் அல்லது மத்திய பொது தகவல் அகிகாரி, மத்திய தகவல் கமிஷனுக்கு உங்கள் விண்ணப்பித்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பிரிவ (1) பிரிவு 19 ன் கீழ் அனுப்பவில்லையென்றாலும்
  • மத்திய பொது தகவல் அதிகாரி இச்சட்டம் மூலம் தகவல் பெறும் உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலோ
  • குறிப்பிட்ட கால அளவுக்குள் உங்களுக்கு நீங்கள் கேட்ட தகவல் கொடுக்கப்படாமல் இருந்தாலோ அல்லது பொது தகவல் அதிகாரி உங்கள் விண்ணப்பத்திற்கு பதிலளிக்காமல் இருந்தாலோ
  • முறையான காரணமின்றி மத்திய பொது தகவல் அதிகாரி ஒரு குறிப்பிட்ட தொகையினை கட்டணமாக செலுத்தச்சொன்னாலோ
  • இச்சட்டத்தின் கீழ் மத்திய பொது தகவல் அதிகாரி நீங்கள் கேட்ட தகவலை அரைகுறையாகவோ அல்லது தவறாகவோ தெரிவித்ததாக நீங்கள் நம்பினாலோ
  • நீங்கள் கேட்ட தகவலுக்கு, மத்திய பொது தகவல் அதிகாரி பதில் கொடுத்து நீங்கள் திருப்தி அடையாமல் இருந்தாலோ
பிடிஎப் அல்லது ஜேபிஜி அல்லது ஜிப் முறையில் தேவையான ஆவணங்கள்
  • வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் இருப்பதற்கான சான்றிதழ் (நீங்கள் கட்டணவிலக்கு கோரினால்)
  • வயதுக்கான சான்றிதழ் ( நீங்கள் மூத்த குடிமகனாக இருப்பின்)
  • ஆரோக்கிய சான்றிதழ் (நீங்கள் மாற்றுத்திறனுடையவராக இருப்பின்)
  • உங்களுடைய வழக்குக்காக ஏதேனும் விவரங்கள் தேவைப்படின் அதற்கான சான்றிதழ்கள்
  • எல்லா ஆவணங்களும் பிடிஎப் அல்லது ஜேபிஜி அல்லுது ஜிப் வடிவமாக இருக்கவேண்டும்
  • நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 2 MB-க்கு மேல் இருக்கக்கூடாது
இணைய விண்ணப்பத்தை பரிசீலனை செய்தல்
  • இணையம் மூலம் விண்ணப்பிக்க விரும்பினால் இந்த இணைய தள முகவரிக்கு கொடுக்கவும் http://rti.india.gov.in/rti_direct_complaint_lodging.php )
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன் “Save as Draft/ Submit” எனும் பொத்தானை அழுத்தவும்
  • விண்ணப்பம் டிராப்ட் ஆக பதிவானவுடன் உங்களுடைய விண்ணபத்திற்கென்றே ஒரு குறிப்பிட்ட அடையாள எண் வழங்கப்படும்
  • உங்களுடைய விண்ணப்பத்தை ‘Save as Draft’ ஆக சமர்ப்பித்தால், கடைசியாக சமர்ப்பிப்பதற்கு முன்பு உங்களுடைய விண்ணப்பத்தை திருத்தியமைத்துக் கொள்ளலாம்
உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையினை அறிந்துகொள்ளுதல்
  • விண்ணப்பத்தினை பதிவு செய்தவுடன் அந்த விண்ணப்பத்தின் நிலையினை இணையம் மூலம் அறிந்துகொள்ளலாம்
  • உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ள http://rti.india.gov.in/rti_check_request_status.php?cat=compl செல்லவேண்டும்.

Information Guide on the Welfare Schemes of the Government



            

தமிழ்நாட்டில் இணைய நிர்வாகத் முயற்சிகள் பதிவு நெட்வொர்க் (ரெஜிநெட்)


தமிழகத்தில் மின்னாட்சி
  • சம்பந்தப்பட்ட இலாகாக்களுக்கு உங்களின் புகார்கள்/குறைகளை ஆன்லைனில் பதிவு செய்து அவற்றுக்குத் தீர்வு பெறலாம்.
  • மாவட்ட வாரியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் வசதி.
  • முதலில் சம்பந்தப்பட்ட துறையைத் தேர்ந்தெடுத்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
உங்களின் புகார்களை/குறைபாடுகளைத் தெரிவிக்க இங்கே க்ளிக் செய்க  


சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கு நிலவரப்பட்டியல்
  • சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் மதுரையில் உள்ள அதன் அமர்வு நீதிமன்றத்திற்கு உட்பட்ட தினசரி,வாராந்திர மற்றும் மாதாந்திர வழக்கு நிலவரப் பட்டியல் இங்கு உள்ளது.
வழக்கு நிலவரப் பட்டியலைக் காண இங்கே க்ளிக் செய்க
ஆன்லைனில் வாக்காளர் பட்டியல்
  • வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தேடும் வசதி.
  • மாவட்டம் மற்றும் தொகுதியைத் தேர்ந்தெடுத்து பெயர் உள்ளதா எனத் தேடும் வசதி.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைத் தேட இங்கே க்ளிக் செய்க
ஆன்லைனில் மக்கள் சாசனம் (சிட்டிசன் சார்ட்டர்)
  • தமிழக அரசின் துறைவாரியான மக்கள் சாசனங்களை அறிந்து கொள்ளுதல்.
  • இவை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இருக்கும்
மக்கள் சாசனங்களைப் படிக்க  அல்லது டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்க
ஆன்லைனில் மின் கட்டணக் கணக்கீடு
  • உங்களின் மின்சாரக்கட்டணத்தைக் கணக்கிட்டு அறிந்து கொள்ளுதல்
மின்சாரக்கட்டணத்தைக் கணக்கிட இங்கே க்ளிக் செய்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உங்களின் புகார் மனுவை அளிக்க இங்கே க்ளிக் செய்க  
அரசாங்க டெண்டர் விபரங்கள்
  • தமிழக அரசின் பல்வேறு துறைகளின்  டெண்டர் அறிவிப்புகள் ஆன்லைனில் உள்ளன.
  • அனைத்து டெண்டர் அறிவிப்புகளும்  ஆங்கில மொழியில் பி.டி.எஃப் பார்மட்டில் இருக்கும்
சமீபத்திய டெண்டர் அறிவிப்பினை அறிய இங்கே க்ளிக் செய்கhttp://www.tenders.tn.gov.in/
இணையதள டைரக்டரி (தொகுப்பகம்)
  • அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்களின் இணையதள முகவரிகள் அடங்கிய பட்டியல்.
  •  தமிழக அரசின் துறைகள், வாரியங்கள், அரசின் பொறுப்பின் கீழ் இயங்கும் துறைகள், மாவட்டங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி, கல்வி நிறுவனங்கள் என்று பல்வேறு பிரிவுகளாக டைரக்டரி வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இணையதள தொகுப்பகத்தைப் பயன்படுத்த இங்கே க்ளிக் செய்கhttp://www.tn.gov.in/misc/links-state.htm
வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பித்தல்
வில்லங்கச் சான்றிதழ் (இ.சி) விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்படும் தகவல் மீது சேவை மையத்தில் செயல்முறை நடவடிக்கை எடுக்கப்பட்டுச் சான்றிதழ் தயாராக வைக்கப்படும். விண்ணப்பதாரர், தேவைப்படும் கட்டணத்தைச் செலுத்தி நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கூரியர் சேவை மூலம் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். ஆனால், சான்றிதழுக்கான கட்டணம், அனுப்புவதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும். பதிவுசெய்யப்பட்டுள்ள சொசைட்டிகள் பற்றிய விவரங்கள் மற்றும் அதனுடைய தகுதியைக் கிளிக் செய்வதன் மூலம் கண்டறியலாம். பொதுமக்கள் சீட்டு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம், மேலும், அவர்கள் சேர விரும்பும் சீட்டு நிறுவனம் பதிவு பெற்ற ஒன்றுதானா என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
எக்ஸ்க்ளூசிவ் ரெஜீநெட் அமைப்பு பின்வரும் ஐ.டி. சேவைகளை வழங்குகிறது.
  • சென்னை நகரத்தில் அமைந்துள்ள எந்தச் சொத்துக்கான வில்லங்கச் சான்றிதழ்கள் சென்னையில் இருக்கின்ற எந்த சப்ரிஜிஸ்ரக் அலுவலகத்திலும் கிடைக்கும்.
  • சென்னையில் எந்தச் சொத்திற்கான சொத்து மதிப்பு ஸ்டேட்மெண்ட்டும் கிடைக்கும்.
  • கைடுலைன் வேல்யூவிற்கான மாநிலவாரியான தகவல்.
  • ஏற்கனவே ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களின் உறுதியளிக்கப்பட்ட பிரதிகள் வழங்குதல்.
  • பத்திர மாதிரிகள், இதனால் பதிவுசெய்பவர், தரகர்களின் உதவியின்றி, தானே சொந்தமாகப் பத்திரங்களைத் தயார்செய்துகொள்ளலாம்.
  • ஆவணங்களைப் பதிவு செய்தல், சொசைட்டிகள், நிறுவனங்கள், சீட்டு நிறுவனங்கள் சம்பந்தமான மாதிரிப் படிவங்கள்.
ஸ்டார் திட்டம் (பதிவுகளின் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெளிப்படையான நிர்வாகம்) உயர் தர ஐ.டி. சேவைகூட பதிவுத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கணினி மூலம் இயக்கப்படுவதன் சிறப்பம்சங்கள்
  • ஆவணங்களைக் காத்தல் - ஸ்கேன் செய்து குறுந்தகட்டில் சேகரித்துவைப்பதன் மூலம்.
  • வில்லங்கச் சான்றிதழ் வழங்குதல்
  • ஏற்கனவே, ஸ்கேன் செய்ய ஆவணங்களின் உண்மையானது என்று உறுதியளிக்கப்பட்ட பிரதிகள்.
  • சொத்து மதிப்பீடு அறிக்கை தயாரித்தல்
  • திருமணப்பதிவு/சொசைட்டிகள்/நிறுவனங்கள்/சீட்டுகள் கண்காணிப்படுதல்.
சேவை அளவுகள் வலைதளத்தில் கைடுலைன் மதிப்புகள் -http://www.tnreginet.net
செயல்பாடு
கணினிமயமாக்கலுக்கு முன்பு
கணினிமயமான பின்பு
இ.சி வழங்குதல் (சாதாரண)
8 நாள்கள்
5 நிமிடங்கள்
இ.சி வழங்குதல் (அவசரம்)
1 நாள்
5 நிமிடங்கள்
சொத்து மதிப்பீடு
30 நிமிடங்கள்
5 நிமிடங்கள்
கைடுலைன் வேல்யூ   
-
வலைதளத்தில்
சான்றுப் பிரதிகள்
4 நாள்கள்
5 நிமிடங்கள்
பதிவு
4 நாள்கள்
60 நிமிடங்கள்
திருமணச் சான்றிதழ்
1 நாள் 
15 நிமிடங்கள்
வலைதளம், பதிவு செயல்முறைகளில், வெளிப்படையான தன்மை வேண்டுமென்பதை நோக்கியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளுக்கான கைடுலைன் மதிப்பைக் கணக்கிடுதல்,  இதனால் பொதுமக்கள் எந்த ஒரு இடத்திற்கான, கைடுலைன் மதிப்பையும் பதிவுத் துறை அலுவலர்களின் உதவியின்றி எந்தநேரமும் தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது, இது அதிகப் பேர் பயன்படுத்தும் அரசாங்கத்தின் முக்கியமான வலைதளமாகக் கருதப்படுகிறது.
பதிவுத் துறை பற்றிய பொதுவான தகவல்கள் மட்டுமல்ல, பதிவு செயல்முறை மற்றும் பொதுமக்கள் யூட்டிலிட்டி படிவங்கள் கூட டவுன்லோடு செய்யும் வகையில் கிடைக்கிறது. பதிவுசெய்ய விண்ணப்பிப்பதற்கான,  நிலைநிறுத்தப்பட்ட மாதிரி ஆவணங்கள், வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒருவர் பதிவு செயல்முறைகளை நன்கு அறிந்துகொண்டு, தானாகவே ஆவணங்களை எழுதிப் பதிவு செய்யக் கொடுக்கலாம். இந்த வலைதளம் இதற்கெனத் தனியாக மெயில் சேவை கொண்டுள்ளதால், பொதுமக்கள் பதிவுத் துறைக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு, தங்கள் புகார்களைச் சரிசெய்து கொள்ளலாம்.
ராசி மையங்கள்
இணையம் மூலம் கிராமப்புறச் சேவைகள்
ராசி மையங்கள்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிப்பது மற்றும் தகவல் தொடர்புக்கான வழிமுறையை ஏற்படுத்துவதை நோக்கமாக் கொண்டு தொடங்கப்பட்டது. பஞ்சாயத்து அலுவலகங்களை இணைப்பதன் மூலம், தகவல் பரிமாற்றம், விவசாயத்தில் சிறந்த வழிமுறைகள் போன்ற தகவல் தளங்களை உருவாக்குவது  போன்றவை மிக்கிய சேவைகளாக இருக்கும்.
ராசி மையங்கள், இணைய நிர்வாகத்தினால் அமைக்கப்பட்ட தகவல் மையங்கள். இது பல்வேறு சேவைகளை வழங்குகிறது. உதாரணமாக, கிராமத் தகவல் தளம், மாவட்டம், பிளாக் மட்ட துறைகளுடன் நெட்வொர்க், ஆன்லைனில் புகார் மனுவைச் சமர்ப்பித்தல், எஸ்.எச்.ஜி. தகவல் தளம், வேலை மேம்பாடு பிளாக் அளவில், தகவல் தளத்தை வாங்குவது விற்பது, சந்தை விலைகள், நிலப்பதிவு சிட்டா போன்ற சேவைகள் தரப்படுகின்றன. மேலும், இது மாவட்ட நிர்வாகத்தை நடத்துவதற்கான சிறந்த முன்மாதிரியாகவும் இருக்கிறது. ராசி நெட்வொர்க்கை, என்.ஜி.ஓ., மாவட்டத்திலுள்ள தொழில் முனைவோர் மற்றும் சுய உதவி குழுக்கள் இயக்குகின்றன. சிறந்த விவசாய முறைகள் கொண்ட குறுந்தகட்டை இந்த அமைப்பு உருவாக்கி உள்ளது. இது உள்ளூர் விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.
வி.ஐ.எஸ்.பி. (VISP)
விடியல் - தகவல் சேவை அளிப்போர்
நோக்கம்
கிராமப்புறச் சமுதாயத்தின் பலவீனமான பகுதிகளை ஐ.சி.டி. உதவியின் மூலம் அதிகாரம் பெறச் செய்வது. வி.ஐ.எஸ்.பி மையம், ஐ.சி.டி.யின் மூலம் எளிதில் கிடைக்கத்தக்க பல சேவைகளை வழங்குகிறது, முக்கியமாக விவசாயப் பொருள்களின் விலை, ஜோதிடம் பற்றிய தகவல், கிராமப்புற சந்தை இடங்கள், திருமணச் சேவைகள், கல்விச் சேவைகள், சுகாதார நலச் சேவைகள், குறைகள் களைதல், அரசாங்க விண்ணப்பங்களை ஏற்பாடு செய்தல் போன்றவை. பயனாளருக்குத் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவ மனைகளில் பயன்படுத்தும்படியாகத் தள்ளுபடிக் கூப்பன்கள் தரப்படுகின்றன. இன்னும் பிற சேவைகள், இணையத்திலிருந்து தொலைபேசி மற்றும் அடிப்படைக் கணினிக் கல்வி வி.ஐ.எஸ்.பி. சமுதாய மறுமலர்ச்சித் தொண்டர்களால் முதல்கட்டமாக திருச்சி மாவட்டத்தில் ஆறு கிராமங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
பொருள்
ஏழைப் பெண்கள் பொருளாதார வலிமையைப் பெறுவதை நோக்கமாக் கொண்டு ஏ.எஸ்.ஏ. கிராம விடியல் வருவாய் சார்ந்த பொருள்களின் கலவையைத் தருகிறது. எதையும் அடமானமாகக் கோராமல் கடன் பொருள்கள், குறிப்பிட்ட இடைவெளியில் உறுப்பினர்களுக்குத் தரப்படுகிறது. ஒவ்வொரு கடன் சுழற்சிக்குப் பிறகு, கடன் தொகை அதிகரிக்கப்படுகிறது. ஏ.எஸ்.ஏ - ஜி.வி. தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, உறுப்பினர்களுக்கு ஆயுள் காப்பீட்டைத் தருகிறது. நிதிப் பொருள்கள் தவிர்த்த ஏ.எஸ்.ஏ - ஜி.வி ஏழைகளின் சமூக நலத்தை முன்னிட்டு, பல்வேறு கடன்கள் மற்றும் கடன்கள் தாண்டிய சேவைகள் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடன்கள்
பொதுக் கடன் - ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், தொடக்கத்தில் செய்ய வேண்டிய முதலீட்டிற்கான பணத்தைச் சம்பாதிக்கும் வகையில் ஏழைப் பெண் தொழில் முனைவோர்க்கு ஏ.எஸ்.வி - ஜி.வி. சிறிய கடன் தொகைகளை எதையும் அடமானமாகக் கோராமல் கடன்களைத் தருகிறது. இந்தக் கடன்கள் ஐந்து உறுப்பினர் குழுவில் இருக்கும் ஒரு பெண்ணுக்குத் தரப்படுகிறது. பிற நான்கு உறுப்பினர்களும், கடன் வாங்கியவருக்கு உத்தரவாதம் அளிப்பவர்களாகச் செயல்படுவார்கள். கடன் திரும்பிச் செலுத்துதல், வாரவாரம் நடக்கும் மையச் சந்திப்புகளில் வசூலிக்கப்படும் இந்தச் சந்திப்பை ஏ.எஸ்.ஏ - ஜி.வி யின் கள மேலாளர்கள் நடத்துவார்கள்.
பருவ காலக் கடன்-. ஃபோகஸ் குரூப் விவாதத்திற்குப் பிறகு தொடங்கப்பட்டது. தொழில் முனைவோர் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளரிடம் திருப்தி பற்றிய சர்வே எடுக்கப்பட்டது. இத்திட்டம், ஏ.எஸ்.ஏ - ஜி.வி உறுப்பினர்களுக்கு, முக்கியத் தருணங்களின்போது, அதாவது முக்கியமான பண்டிகைகளின்போது (தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல்) பணம் கடனாகப் பெறுவதற்கான வழிமுறை இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது. பண்டிகைகள் தவிர்த்த, அவர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படும் சமயங்களில் இந்த வசதி செய்யப்பட வேண்டும்.
பருவக்காலக் கடன், தீபாவளி, கிறிஸ்துஸ், பொங்கல் போன்ற சமயத்தில் முந்தைய கடனைச் சரியாகத் திரும்பிச் செலுத்துபவருக்கும் மையச் சந்திப்புகளுக்குச் சரியாக வருபவர்களுக்கும் தரப்படுகிறது. அத்தகைய உறுப்பினர்களுக்கு இன்னும் பிற முக்கியமான பண்டிகைகளின்போதும் மற்றும் பள்ளி அட்மிஷன்களின்போதும் பண்டிகைகளில் போதும் மற்றும் பள்ளி அட்மிஷன்களின் போதும் தொடர்ந்து கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சேவையைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ளhttp://www.asadev.com/ இதைக் கிளிக்செய்யவும்.
கிராம ஆதார மையம்
நோக்கம் : பல்வேறு வகையான சேவைகளை வழங்குவது.
இந்த ஐ.எஸ்.ஆர்.ஓ. - எம்.எஸ்.எஸ்.ஆர்.எப். - வி.ஆர்.சி. திட்டம் வி.எஸ்.ஒ.டி அடிப்படையாகக் கொண்ட நெட்வொர்க் மூலம், அனைத்து விஷயங்களைப் பற்றிய தகவல்களை, குறிப்பாக, தொலை மருத்துவம், தொலைதூரக் கல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை சேவைகள், இணைய நிர்வாகச் சேவைகள், வானிலை சேவைகள், தண்ணீர் மேலாண்மைப் பயன்முறைகள், எந்தவிதச் செலவுமின்றி தருவதற்குப் பாடுபடுகிறது.
இந்த நெட்வொர்க்கின் ஒரு பகுதியில் இருப்பவர், மற்றொரு பகுதியில் இருப்பவருடன் வீடியோ மற்றும் ஆடியோ இணைப்புகள் மூலம் உரையாட முடியும். ஒவ்வொரு மையத்திற்கும் 20 கணினிகள் தரப்பட்டுள்ளன. டாட்டா டெலி சர்வீசஸ், பி.சி.ஓ. பூத்துகளைத் தந்துள்ளது. இதன் மூலம் தகவல் பரிமாற்றம் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, வானிலை, சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் கிராமப்புற மக்கள் சவால்களைச் சந்திக்கும் வகையிலான தகவல் மற்றும் பயிற்சிகள் கிடைக்கின்றன. இப்பொழுது தமிழ்நாட்டில், 10 கிராம வள மையங்கள் இருக்கின்றன. அன்னவாசல், சென்னை, சிதம்பரம், மணமேல்குடி, நாகப்பட்டினம், நாகர்கோவில், செம்பட்டி, தங்கச்சிமடம், திருவையாறு மற்றும் வயநாடு மேலும் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் ஒன்றுள்ளது.
தமிழ் நிலம் திட்டம்
திட்டத்தின் நோக்கம் :
குடிமக்களை மையமாகக் கொண்ட,  நிலம் சம்பந்தமான அனைத்து இணைய சேவைகளையும் வழங்குதல்.
குடிமக்களுக்கு சிட்டா எக்ஸ்ட்ராட்/ பதிவு எக்ஸ்ட்ராட்/ அடங்கல் எக்ஸ்ட்ராட் வழங்குதல். எல்லா விவரங்களும் அடங்கிய தகவல் தளம் ஒன்றை உருவாக்கி பிளாட்வாரியான, உரிமையாளர் வாரியான நில விவரங்களைச் சேகரித்து வைத்தல், இத்யாதி கணினி முறையின் மூலம் காலவரிசைப்பட்ட அறிக்கைகளைத் தயாரித்தல். மேம்படுத்தப்பட்ட மற்றும் திறன்பட்ட சேவை, எளிதான பராமரிப்பு மற்றும் நிலப் பதிவுகளின் அப்டேட்டுகள், ஒளிவு மறைவற்ற நிர்வாகம் போன்ற சேவைகளையும் செய்கிறது. மேலும், பொதுமக்களுக்கு தொடுதிரை கணினிச் சாவடிகள் மூலம் தகவல் கிடைக்கச் செய்வது (http://www.tn.nic.in/tamilnilam/Kiosks.htm ) பிற துறைகளுடன் தகவல்களைப் பரிமாறுதல், அதாவது சப் ரிஜிஸ்டர் அலுவலகம், விவசாயத் துறை. இத்யாதி போன்ற சேவைகளையும் தருகிறது.
தொடுதிரைச் சாவடி, குடிமக்கள் சார்ந்த சேவைகளைத் தருவதற்காக, தமிழ்நாட்டின் வருவாய்த் துறை மாநிலத்தில் உள்ள 127 தாலுகாக்களில் தொடுதிரைச் சாவடிகளை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் தொடுதிரைச் சாவடி, 29 மாதிரி தாலுகாக்களில் பொருத்தப்பட்டது. தொடுதிரைச் சாவடிக்கான வரவேற்பு மிகச் சிறப்பானதாக இருந்ததால் அதைத் தொடர்ந்து 98 தாலுக்காக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
தொடுதிரைச் சாவடி மூலம் குடிக்களுக்குச் சேவை
இதில் நில உரிமையாளர்கள், தங்களின் உரிமை பற்றிய விபரங்களைப் பார்வையிடலாம், உரிமைப் பதிவு பிரதியையும்கூடப் பெற்றுக்கொள்ளலாம். நில கைடுலைன் மதிப்பு, சப்-ரெஜிஸ்டர் அலுவலகத்தில் செய்யப்படும் சொத்துப் பதிவுக்குப் பொருத்தமானதாக இருக்கும். தொடுதிரையில் பெருவாரியான சர்வே எண்வாரியான டிஸ்பிளேக்கள் பார்க்கக் கிடைக்கும். கொடுக்கப்பட்ட சர்வேக்கான
அமலாக்க நிலைகள்
  • சிறு மையங்கள் மூலம் சேவைகளைப் பெற்றவர்கள் ஏப்ரல் 2002இல் இருந்து, மார்ச் 2006 வரை, 55.77 லட்சம் பேர்கள்
  • தமிழ் நிலத்தை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தி சிட்டா எக்ஸ்ட்ராட், பதிவு எக்ஸ்ட்ராட், போன்ற சேவைகளைப் பெற்ற மக்கள் சராசரியாக 1.25 லட்சத்திற்கு மேற்பட்டோர்.
  • ஒவ்வொரு மாதமும் சேவையை வழங்கியதன் மூலம், பயன்படுத்தினோர் கட்டணமாக, 25லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழ் நிலம் மென்பொருள் பின்வரும் நிரந்தரமான, அடிப்படைப் பதிவுகளை நிர்வகித்து வருகிறது. ‘ஏ’ பதிவு, சிட்டா பதிவு, மற்றும் அடங்கிலினுடைய நான்-ஸ்பேசியல் தகவல்கள்.
‘ஏ’ ரெஜிஸ்டரின் விவரங்கள்
தாலுகாவின் பெயர்
2. கிராமத்தின் பெயர்
3. சர்வே எண்
4. சப்-டிவிஷன் எண்
5. பழைய சர்வே எண்
6. பார்ட் இண்டிகேட்டர்
7. அரசாங்கம்/தனியார்
8. நிலத்தின் வகை
9. பாசன ஆதாரம்
10. வரி விலை
11. மண்ணின் வகை / முதன்மையாக
12. மண்ணின் வகை / இரண்டாவதாக
13. மண் தரம்
14. ஹெக்டேர் ஒன்றுக்கான வரி
15. விரிவாக்கப்பட்ட ஹெக்டேர்
16. விரிவாக்கப்பட்ட ஏக்கர்கள்
17. மொத்த வரி
18. பட்டா எண்
19. குறிப்புகள்
20. புறம்போக்கு வகை எண்
சிட்டா விவரங்கள்
1. தாலுகா கோட்
2. கிராம கோட்
3. பட்டா எண்
4. உரிமையாளர் எண்
5. உறவினர் பெயர்
6. உறவுமுறை கோட்
தமிழ் நிலத்தால் கையாளப்படும் சேவைகள்
தமிழ் நிலம் மென்பெருள் கையாளும் சேவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. முழு களப் பட்டா மாற்றல்
2. இணைப் பட்டா மாற்றல்
3. சப்-டிவிஷன்
4. சப் டிவிஷன்களை இணைத்தல்
5. வகைப்பாட்டை மாற்றுதல்
6. அடங்கல்
7. அசைன்மென்ட்
8. உடைமை மாற்றுதல்
9. நிலம் கைப்பற்றுதல்
10. ஆக்ரமிப்பு
11. நில வருவாய்
12. செட்டில்மெண்ட்
தமிழ் நிலம் பற்றி மேலும் அறிய ஷ்ஷ்ஷ்.tஸீ.ஸீவீநீ.வீஸீ/tணீனீவீறீ ஸீவீறீணீனீ என்று கிளிக் செய்யவும்.