ஆதரவாளர்கள்

திங்கள், 24 நவம்பர், 2014

ஆடு குளுக்குமா மோடி தலை உருளுமா....................?

2014 டிசம்பர் 1 விவசாயிகளுக்கு வெளிச்சம் கிடைக்குமா?
2013 ஆம் ஆண்டு டிசம்பர் இதொநேசியா பாளி தீவில் நடைபெற்ற  உலக வர்த்தக மாநாட்டில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட விவசாய ஒப்பந்த திருத்தம் இந்தியா கையொப்பம் இட்டதால் இந்திய விவசாயிகளின் நிலை கேள்விக் குறியானது.
ஒப்பந்தப்படி நான்கு ஆண்டுகள் அவகாசம் இந்தியா பெற்றிருந்தது

அதன் பிறகு ஆட்சி மாற்றம் உலக நாடுகள் மோடி அரசை ஒப்பந்தப்படி அமல்பப்டுத்த வற்ப்புறுத்த துவங்கின உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் படி கையொப்பம் இடப்பட்ட ஒப்பந்தம் ஆறு மாதத்தில் அமல்படுத்த துவங்க வேண்டுமென வர்ப்புருத்தியது.
 2014 ஜூலை 31 ஆம் தேதிக்குள் அமல்படுத்த உலக நாடுகளும் வர்த்தக அமைப்பும் அமெரிக்காவும் கொடுத்த நெருக்கடிகளை மோடி மதிக்கவே இல்லை அப்போதைய மோடியின் நிலையால் இந்திய விவசாயிகள் காப்பாற்றப்பட்டனர் இது ஒரு சாதனைஎன்றாலும் பிஜேபி தொண்டர்களுக்கோ அதன் தலைவர்களுக்கோ இதைப் பற்றிய அறிவு இல்லாத காரணத்தாலோ அல்லது எதிர்காலத்தில் நிலைப்பாடு மாறும் என்பதாலோ கொண்டாடவேண்டியதைக் கொண்டாடாமல் விட்டனர் 60 கோடி விவசாயிகள் காப்பாற்றப் பட்டனர்
இந்நிலையில் 2014 டிசம்பர் மாதம் 1 முதல் 3 ஆம் தேதி வரை இந்தோனேசியாவில் உலக வர்த்தக மாநாடு நடைபெற உள்ளது . இம்மாநாட்டில் இந்தியாவை விவசாய ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரிக்கை எழும்
நடைபெற இருக்கும் மாநாட்டில் எப்படியாவது ஒப்பந்தத்தில் இந்தியாவைக் கையொப்பம் இட்டு அமல்படுத்த செய்யவே அமெரிக்காவால் மோடிக்கும் உலக நாடுகளாலும் மோடிக்கு பெரும் மரியாதை கவுருவம் அளிக்கப்பட்டு வருகின்றது அதாவது நம்ப ஊர்ல கோயில் திருவிழாவில் கிடா வெட்றதுக்கு முன்பு அதன் காலைக் கழுவி தண்ணி போட்டு குலுக்க உடுவான்களே அதைதான் உலக நாடுகள் நமது நாட்டு பிரதமருக்கு செய்கின்றன

கருத்துகள் இல்லை: