ஆதரவாளர்கள்

Thursday, January 30, 2014

வாக்குறுதி அளித்தால் தான் ஒட்டு இல்லையேல் நோட்டா!!!

தமிழ்நாடு தகவல் ஆணையர்களை பதவிநீக்கம் செய்யக்கோரும் கோரிக்கை உண்ணாவிரதம்

நாள் 05-02-2014 புதன்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை
இடம் ; சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் சென்னை

கோரிக்கைகள் ;


தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் சட்டத்தை மீறுகின்றார்கள் தவறு செய்கின்றார்கள் என்று தமிழக ஆளுநர் புகார் பெற்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் முரியீடு செய்து தகவல் ஆணையர்களது ஆணைகளை நீதிபதிகள் ஆய்வு செய்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பதவி நீக்கம் செய்யலாம்

தமிழக ஆளுநர் ; தகவல் ஆர்வலர்கள் ஆளுநரிடம் ஆணையர் மீது புகார் அளித்தால் ஆளுநர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் அந்த மனுக்களை பணியாளர் நிவாகத்திடம் விசாரணை செய்ய அறிவுறுத்தி அனுப்புகின்றார்கள். மனுக்களை எவ்வாறு கையாள வேண்டும் என்றே தெரியாத ஆளுநர் அலுவலகம் ஆளுநர் அவர்கள் உடனே திருந்திட வேண்டும்

1). ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் நடைபெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் நமெக்கெல்லாம் கிடைக்கப்பெற்ற உண்மையான சுதந்திரமாக போற்றப்படும் தகவல் உரிமைச் சட்டம் 2005 தமிழகத்தில் செயலிழந்து கிடக்கின்றது.

தகவல் சட்டத்தின்படி ஆணைகள் இடவேண்டிய தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் அச்சட்டத்திற்கு புறம்பாக வேண்டுமென்றே தவறான ஆணைகள் இடுகின்றார்கள் என்று தகவல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றார்கள்..

விசாரணையின்போது மனுதாரர்களை அவமரியாதையாக நிற்கவைத்து, ஒருமையில் அழைப்பது, மனுதாரர்கள் சட்டத்தின் பிரிவுகளைக் கூறி தகவல் தர மறுக்கும் பொது தகவல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரினால் நீ குறுக்கே பேசினால் நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லி உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டுவது காவலர்களை அழைத்து வெளியே இவரை வெளியே அனுப்பு என்று மிரட்டுவது என்று ஆணையர்கள் செயல்படுவது சட்டத்தையே கெலிக்கூத்தாக்குகின்றது

ஊழல் செய்யும் அலுவலர்களுக்கு துணையாக தவறானஆணைகள் இடுவது தகவல் தராத அலுவலர்களை விடாரனைக்கு முன்னும் பின்னும் விசாரணை ஆணையர்கள் தனியாக சந்திக்கின்றார்கள். தனியாக சந்திக்கும் அலுவலர்களால் ஆணையர்கள் பலன் அடைகின்றார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன ஆகவே

2) ஊழல் ஒழிப்புத் துறையே தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் மீதும் ஒரு கண் வெய்யுங்கள்
காரணம் விசாரணை ஆணையர்கள் பின்னும் தகவல் தராத பொது தகவல் அலுவலர்களை தனியாக சந்திக்கின்றார்கள் சந்திப்பதனால் ஊழல் அலுவலர்களின் செயலுக்கு துணையாக இருக்க இவர்களும் லஞ்சம் வாங்குகின்றார்கள் என்று புகார்கள் வருகின்றது

இதற்கெல்லாம் ஒருபடி மேலாக தலைமைத் தகவல் ஆணையர் அவர்களும் ஊழல் அலுவலர்களுக்கு துணை போகின்றார்கள்

இவ்வாறெல்லாம் ஆணையர்கள் தவறு செய்கின்றார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் உரிய மன்ற அனுமதியுடன் ஆணையர்களை பதவி நீக்கம் செய்யுங்கள் என்று தமிழக ஆளுநரிடம் புகார் அளித்தால் ஆளுநரோ அப்புகார்கல் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுங்கள் என்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு மனுக்களை சட்டத்திற்கு புறம்பாக திருப்புகின்றார்கள்

ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டால் அவர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடக்க சட்டம் வகையும் செய்கின்றது ஆனால் அவர்கள் அந்த சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் திசை திருப்பும் நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்கின்றது

ஆளுநர் அவர்களும் உள்நோக்கத்துடன் செயல்பட தகவல் ஆர்வலர்கள் இன்னும் இந்த அரசு மீது அதிகப்படியான வெறுப்பை காட்ட வேண்டும் இப்பொழுது ஆளும் அரசுக்கு அவப்பெயர் கிடைக்க வேண்டும் என்ற காரணம் இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகின்றது

இப்படி எல்லாத் தரப்பும் தகவல் சட்டத்திற்கு எதிரான நிலையில் இருப்பதால் தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காமல் சட்டமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து தலைமை தகவல் ஆணையர் உள்பட அனைத்து தகவல் ஆணையர்களையும் உடனடியாக பதவி நீக்கம் செய்து பொதுமக்கள் கேட்கும் தகவல்களை குறித்த காலத்திற்குள் வழங்கிட ஆவன செய்யவேண்டுமென்ற கோரிக்கையும்


தமிழகம் முழுதும் இருந்து ஆயிரம் தகவல் ஆர்வலர்கள் மட்டும் பங்கேற்று நடத்திடும் ஒருநாள் கோரிக்கை உண்ணாவிரதம் நடத்திடுவது என்று இந்தியன் குரல் அமைப்பின் சார்பில் அனைத்து தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள் மற்றும் ஊழல் ஒழிப்பு மற்றும் மனித உரிமை அமைப்புகள் பங்கேற்கும் உண்ணாவிரத நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றோம்

இப்படி சட்டங்களை செயல்படுத்துபவர்கள் செயல்படாமல் இருக்கக் காரணம் நம்மை ஆள்பவர்களும் ஆண்மையுள்ள அரசு அமைய வேண்டும் அரசியல் கட்சிகள் தங்களது பங்காளிச் சண்டையை நிறுத்திவிட்டு மக்கள் பிரச்சனைகளைப் பேசவேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாக்குறுதி அளித்தால் தான் ஒட்டு இல்லையேல் நோட்டா என்று கடிதம் அனுப்பியுள்ளோம்


அரசியல் கட்சிகளே உங்கள் தேர்தல் வாக்குறுதியில் மத்திய மாநில தகவல் ஆணையம், நீதி மன்றங்கள், அரசு அலுவலர்களும் சட்டத்தை மதித்து சட்டத்தின்படி செயல்பட என்ன செய்வீர்கள் என்று அறிவிக்க வேண்டும்
சேவை பெரும் உரிமை சட்டமும் லோக்பால் லொகயுகதா சட்டம் தகவல் சட்டம் போன்று இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக அமல்படுத்திடஎன்ன செய்வீர்கள் என்று அறிவிக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நம் கோரிக்கைகளை ஏற்று வாக்குறுதி அளித்தால் தான் ஒட்டு இல்லையேல் நோட்டா என்ற கடிதத்தை நீங்களும் அனுப்பிட வகையும் செய்து ஆன்லைன் பெட்டிசன் அனுப்பும் வகையில் பக்கம் உருவாக்கி உள்ளோம். நீங்களும் கையெப்பம் இட்டு அனுப்புவதுடன் உங்களை அறிந்தவர்கள் அனைவருக்கும் நீங்களுமொரு கோரிக்கை வைத்து பரப்புரை செய்திட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றோம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுவெனுமா நோட்டா வேணுமா ?

ஆன்லைன் பெடிசனுக்கும் மேலதிக தகவல்களுக்கும் இணைப்பில் பார்க்கவும்

http://petition.voiceofindian.org/

உன்னாவிரத்தப் பந்தலில் அறிவிக்கின்றோம்

E . பாலசுப்ரமணியன்
இந்தியன் குரல் (VOICE OF INDIAN) நிறுவனர் உறுப்பினர்
9444305581
சென்னை

M . சிவராஜ்
9443489976
இந்தியன் குரல் (VOICE OF INDIAN) நிறுவனர் உறுப்பினர்
வேலூர்


உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் அடுத்த கட்டம் குறித்து உண்ணாவிரதப் பந்தலில் அறிவிப்பு செய்வோம்
தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்
நன்கொடை பெறுவதில்லை,  அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம்  வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை


 நல்லவிசயம் நாலு பேருக்கும் தெரியட்டுமே இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் நன்மக்களே!
www.facebook.com/myvoiceofindianorg

www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com

VOICE OF INDIAN
(0) 91 9443489976
(0) 91 9444305581

No comments: