ஆதரவாளர்கள்

புதன், 22 பிப்ரவரி, 2012

Right to Information act 2005 Training invitation chenai

Dear friends,
 Voice of Indian conform        
Right to Information Act 2005 
Training at Tamilnadu                          
MARCH   2012                              

3rd march vellur                           
4th march at chennai                       
8th and 9th Madurai                            
11th march kancheepuram            
18th march at mallur                      
19th march selam                         
31st march  Theni







 We Invite All against corruption peoples contact INDIAN KURAL Balasubramanian 9444305581


Kindly we request Forward to all your friends in Tamil nadu 


தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பொது



தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பொது கவனத்தில் கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்

http://www.tn.gov.in/tamiltngov/citizen/trans-t-2005.htm

Women role in Anti-Corruption - Sivaraj Women role in Anti-Corruption - Sivaraj


சனி, 18 பிப்ரவரி, 2012

anti corruption activist now get the bail

மகளிர் உதவி காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த சுப்ரமணியம் இப்போ கோர்ட்டுல வாய்தா வாங்கிக்கொண்டு இருக்கிறார்  



Indian Kural Mr M.Sivaraj participate Right to Information act 2005 Dial JEYA T.V Live

RTI HELPING AND TRAINING 
இந்தியன் குரல் திரு எம் . சிவராஜ் அவர்கள்  31 .01 .2012  அன்று   டயல்ஜெயா டி. வி நேரடி ஒளிபரப்பில் தகவல் பெறும்  உரிமைச் சட்டம் 2005 இன் பயன்களையும் பயன்படுத்தும் வழிமுறைகளையும் விளக்குகிறார்கள்   
   

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

Right to Information act 2005 Training at Tamilnadu

இந்தியன் குரல் தகவல் பெரும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி / காலை 10 .மணி முதல் நண்பகல்  ஒரு மணி வரை வகுப்புகள் நடைபெறும் இடங்கள்

செய்யார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிலையம் அருகில் செய்யார்
 பிப்ரவரி 26  
தொடர்புக்கு எம்.முனுசுவாமி 9486172017  

விழுப்புரம் 
பிப்ரவரி 26  
பாலசுப்ரமணியன் 9444305581 


வேலூர் சட்டக் கல்லூரி வேலூர்
மார்ச் 2  
தொடர்புக்கு எம்.சிவராஜ் 94443489976 


நனாஸ் கெஸ்ட் ஹவுஸ் புதிய என் 13 , காளியம்மன் கோயில் தெரு , கோயம்பேடு சென்னை ஐ  ஒ சி பெட்ரோல் பங் அருகில் 
 மார்ச் 4 
திரு.கருணாகரன் 9841279123 


காஞ்சிபுரம் 
மார்ச் 13 
எம். முனுசுவாமி 9486172017 


மல்லூர் சேலம் மாவட்டம் 
மார்ச் 18 
திரு மோகன் 9443615845 


ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு


ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு- தமிழக அரசு

மாணவர்களை ஏழை, பணக்காரராக பிரித்து நடத்தக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது
தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசிதழில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது, தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கான கல்விச் செலவை அரசே ஏற்கும்.
இதற்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகள், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் குழந்தைகள் என அறிவிக்கப்படுகிறது.
அதேபோல் ஆதரவற்றோர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர், திருநங்கைகள், துப்புரவுப் பணியாளரின் குழந்தைகள் ஆகியோர் மிகவும் பின்தங்கியவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
இந்தக் குழந்தைகளை வகுப்பறையில் மற்ற மாணவர்களிடமிருந்து பிரித்து வைத்தல், வேறு இடத்தில் அல்லது வேறு நேரத்தில் வகுப்பு நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
புத்தகங்கள், சீருடைகள், நூலகங்கள், கணினி வசதிகளைப் பயன்படுத்தும்போது இந்தக் குழந்தைகளிடம் எந்தவிதமான பாகுபாடும் காட்டக் கூடாது.
அரசு செலுத்தும் கட்டண அளவு விபரம்: ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு அவர்களுடைய பள்ளிக் கட்டணத்தில் நிர்ணயிக்கப் பட்ட தொகையை செலுத்தும். ஒவ்வோர் ஆண்டும் இரு தவணைகளாக செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் தனியார் பள்ளிகளுக்கு இந்தக் கட்டணத்தை மாநில அரசு வழங்கும்.
அரசிடம் பணத்தைப் பெற தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் சேர்க்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் பட்டியலை ஜூலை மாதத்தில் உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். 30 நாள்களுக்கு அதிகமாக மாணவர் விடுமுறையில் சென்றாலோ பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தினாலோ அதுகுறித்து உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக தனி வங்கிக் கணக்கை பள்ளிகள் தொடங்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகள்: பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கு மருத்துவமனை அல்லது அங்கன் வாடியில் வழங்கப்பட்ட ஆவணங்கள் பெற்றோர் அல்லது காப்பாளர் கூறும் குழந்தையின் வயது ஆகியவற்றை வயதுக்கான ஆவணமாக ஏற்க வேண்டும்.
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான காலக்கெடு கல்வியாண்டு தொடங்கியதிலிருந்து 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்பிறகு பள்ளியில் சேரும் குழந்தைகள் படிப்பை முடிக்க அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.
பள்ளிகளுக்கு அங்கீகாரம்: விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் ஒவ்வொரு பள்ளியும் படிவம் 1-ன் படி தங்களது பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக உறுதி மொழியை வழங்க வேண்டும். அதன்பிறகு இந்தப் பள்ளிகளில் ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்கப்படும்.
விதிமுறைகளை நிறை வேற்றாத பள்ளிகள் அடுத்த 3 மாதங்களுக்குள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு தங்கள் பள்ளிகளில் ஆய்வு நடத்த அதிகாரிகளை அழைக்கலாம்.
புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம்: புதிதாக பள்ளிகளைத் தொடங்க விரும்புபவர்கள் அங்கீகாரத்துக்காக விண்ணப்பிக்கும்போது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறியுள்ளவாறு கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
பள்ளி நிர்வாகக் குழு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை நிர்வகிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாகக் குழுவை ஏற்படுத்த வேண்டும். இக்குழுவில் குறைந்தபட்சம் 9 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குழு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இந்தக் குழுவில் 75 சதவீதம் மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஏழை மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இந்தக் குழுவில் உரிய பிரதி நிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். மீதமுள்ள 25 சதவீத உறுப்பினர்கள் கீழ்க்கண்டவாறு நியமிக்கப்பட வேண்டும்.
உள்ளூர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களால் தீர்மானிக்கப்படும் உள்ளூர் கல்வியாளர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற வேண்டும்.
இதில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும். குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவராக பெற்றோர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தக் குழுவில் பள்ளித் தலைமையாசிரியர் அல்லது துணைத் தலைமையாசிரியர் உறுப்பினராக இருப்பார்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குழு கூட வேண்டும். இங்கு விவாதிக்கப்படும் விடயங்கள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில், சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில், சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

17-02-2012 அன்று வெளியிட்டது
இதன்படி வருமானவரிச்சான்றை சம்பந்தப்பட்ட பகுதி வட்டாட்சியரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழை துணை வட்டாட்சியரும் வழங்குவார்கள். தாழ்த்தப்பட்டோருக்கு வட்டாட்சியரும், பழங்குடியினருக்கு மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியரும் சாதி சான்றிதழை வழங்க அதிகாரமுடையவர்கள். ஆதரவற்றோர் சான்றிதழை மாவட்ட சமூக நல அலுவலரும், H.I.V பாதிக்கப்பட்டோர் மற்றும் திருநங்கையருக்கான சான்றை அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அலுவலரும் வழங்குவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்று துப்புரவுப்பணியாளர்களின் குழந்தைகளுக்கான சான்றிதழை மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் பெறலாம். பிற அலுவலகங்களில் பணிபுரியும் துப்புரவுப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் சான்றிதழை வழங்குவார். விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால் ரேண்டம் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தனியார் பள்ளிகளின் தொடக்க வகுப்புகளில் இட ஒதுக்கீடு பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

புதன், 15 பிப்ரவரி, 2012

Right To Information Act 2005 Training Tamilnadu

Tamilnadu Right To Information Act 2005 Training 

Right To Information act 2005 Training

                                   தகவல் உரிமைச் சட்டம் 2005 கருத்தரங்கம் 
சமூக ஆர்வலர்களே வணக்கம் ,
தகவல் உரிமைச் சட்டமும், மனுக்களை எழுதவும் ஒரு நாள் பயிற்சி 
26 -02 -2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் நண்பகல் 1.00  மணிவரை நடைபெறும் 
இடம் செய்யார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செய்யார் பேருந்து நிலையம் அருகில், செய்யார்
 தொடர்புக்கு;  திரு முனுசுவாமி அவர்கள் 9486172017 
----------------------
- இந்தியன் குரல் 
9444305581 

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

மின்சார கட்டணம் உயர்த்துவது குறித்து திருச்சியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள்


திருச்சி: மின்சார கட்டணம் உயர்த்துவது குறித்து திருச்சியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் எழுந்து நின்று திடீரென ஆர்ப்பாட்டமும், ஆணையத்திற்கு எதிராக கோஷமும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் இது எந்த அளவிற்கு உயர்த்தலாம் என்பது குறித்து மின் ஒழுங்குமுறை ஆணையம் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்து கேட்டு வருகிறது.
திருச்சியில் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இன்று இந்த கூட்டம் நடந்தது. ஆணைய உறுப்பினர்கள் வேணுகோபாலன், நாகல் ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் , விவசாயசங்க அமைப்பினர் எழுந்து நின்று கோஷங்கள் எழுப்பினர். இதில் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, மின் கட்டணம் உயர்த்தக்கூடாது, என்றும் குரல் எழுப்பினர். மின்சாரம் முறையாக விநியோகம்
இல்லாமல் சிரமப்படுகிறோம் இந்நேரத்தில் கட்டணத்தை உயர்த்துவது நியாயமா என்றும், மேலும் இந்த கூட்டம் கருத்து கேட்பு கூட்டமாக நடக்கவில்லை என்றும் குறை கூறினர். தமிழ்நாடு விவசாய சங்கம், பாரதிகிஷன் சங்கத்தினர்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்த எதிர்ப்பை பதிவு செய்தனர். பின்னர் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர். விவசாய அமைப்பினர் திடீரென எழுந்து கோஷம் போட்டதால் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.ரூ. 6 ஆயிரம் கோடி இழப்பீடா ? கூட்டத்தில் பேசிய மின்துறை நிதி செயலர் ராஜகோபால் பேசுகையி்ல் ; இலவச மின்சாரம் வழங்குவது தொடர்பாக அரசுக்கு 6 ஆயிரம் கோடி இழப்பீடு ஆகிறது என்றார். இதற்கு விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தவறான தகவல் என்றும் , கூறினர். இதனால் விவசாய அமைப்பினர் ஆவேசமுற்று கோஷம் போட துவங்கினர். 
விவசாய அமைப்பினர் கூறுவது என்ன ? :கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் கருத்துக்களை எடுத்துரைக்கையில்: மின் வாரியத்தில் உள்ள நிர்வாக சீர்கேடுகள் களைய வேண்டும். மின்வாரியத்திற்கு, தமிழக அரசு வழங்க வேண்டிய ரூ. 10 ஆயிரம் கோடியை விரைந்து வழங்க வேண்டும். மரணப்படுக்கையில் இருக்கும் மின்சாரம் என முதல்வரே ஒப்புக்கொண்டிருக்கும் போது மீட்சிக்கு முதல்வர் நிதி அளிக்க வேண்டியதுதானே ! இதனை விட்டு மக்கள் தலையில் ஏன் பாரத்தை சுமத்த வேண்டும்? இலவச மிக்ஸி, இலவச கிரைண்டர், வழங்கும் பொருட்களுக்கு மின்சாரம் இன்னும் அதிகம் தேவைப்படும். மாற்று எரிசக்தி மூலம் மின்சாரம் உருவாக்க வேண்டும். விவசாயம் செய்ய முடியாமல் தோட்டக்கலை, கோழி வளர்ப்பு, மீன்வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவோருக்கு கமர்சியல் கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தினர்.

RTI Act. One day work shops


Dear Friends,

   RTI Act. One day  work shops


18.02.2012 pondicherry
26.02.12 kancheepuram
04.03.2012 chennai sinmaiya nagar


o      At Tirupattur Vellore Dist. Sacred Heart College on 04-02-2012.  Saturday, from 10 am to 5 pm.

o      At Chennai Thiu.vi. ka .kudiyiruppu, Thiry.vi. Ka Nagar , Just next to Thiru.vi.ka Bus stand . 12-02-2012. from 10 am to 5 pm.
 May be used by you and your  needy friends.
 Willing persons may contact
§        Phone 9487255114  Mr. Srinivasan for Tirupattu Program.
§        Mr. E. Balasubramania Phone 94443 055881 for Chennai program.

 If you find it convenient, you may forward this message/mail, to the interested friends and also send  group SMS those do not have e.mail. facilities.

VOICE OF INDIAN.  M. Sivaraj.
 94443 05581 - 94434  89976 - 98406 13966 –
   94861  72017

புதன், 1 பிப்ரவரி, 2012

மின் கட்டண உயர்வு குறித்த முதல் கருத்துக் கேட்பு கூட்டம், சென்னையில்




மின் கட்டண உயர்வு குறித்த முதல் 
கருத்துக் கேட்பு கூட்டம், சென்னையில் 
நேற்று துவங்கியது. இலவச மின்சார 
சலுகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், 
விவசாய சங்கத்தினர் ஆவேசத்தில், 
கூச்சல் போட்டு வாக்குவாதம் செய்தனர். 
காலை முதல் மாலை வரை, கூச்சல், குழப்பத்துடன், பரபரப்பாக கூட்டம் நடந்து 
முடிந்தது. மின் கட்டண உயர்வு குறித்து, 
பொது கருத்துக் கேட்பு முதல் கூட்டம், 
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று துவங்கியது. மின்சார ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் வேணுகோபால் மற்றும் நாகல்சாமி தலைமையில், மின் வாரிய அதிகாரிகள் முன்னிலையில், கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. பொதுமக்கள், மின் ஊழியர் சங்கம், தொழிற்சாலை, வணிக நிறுவனப் பிரதிநிதிகள், விவசாயம் மற்றும் நுகர்வோர் சங்கத்தினர் உட்பட 84 பேர், கருத்துகளை பதிவு செய்தனர். 147 பேர் மனு கொடுத்தனர்; 500 பேருக்கு மேல் கூட்டத்தில் பங்கேற்றனர்.

திருட்டு கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை; மின் திருட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சிக் கூட்டங்கள், வழிபாடு தல விழாக்களுக்கு, பகிரங்கமாக மின்சாரம் திருடப்படுகிறது. புகார் தெரிவித்தால் கூட, மின் வாரியம் அலட்சியமாகவே உள்ளது என, பலரும் தெரிவித்தனர். மின் வாரியத்திற்கு ஏன் நஷ்டம் ஏற்பட்டது; அதை சரி செய்ய, வாரியமும், ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்டணத்தை உயர்த்துவது நியாயமா? என, கேள்வி கேட்டனர்.

கூச்சல் : "இலவச மின்சார நஷ்டத்திற்கு மக்கள் பொறுப்பாக முடியாது. அந்த நஷ்டத்தை அரசு தான் கொடுக்க வேண்டும். நுகர்வோர் மீது அதிக சுமையை திணிக்கக் கூடாது. விவசாயம் மற்றும் குடிசைகளுக்கு, இலவச மின்சாரம் தருவதால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது. அந்த தொகையை முறையாக கணக்கிட்டு, அரசிடம் அதை மின் வாரியம் பெற வேண்டும்' என, கணபதி என்ற நுகர்வோர் பேசினார். அப்போது, விவசாயிகள் சங்கத்தினர் பலர் எழுந்து, அவரது பேச்சை எதிர்த்து, 
கூச்சலிட்டனர். ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகளிடமும் வாக்குவாதம் செய்தனர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, போலீசாரும், ஒழுங்கு முறை ஆணையத்தினரும், மின் வாரிய அதிகாரிகளும் வேடிக்கை பார்த்தனர். சிறிது நேரத்திற்கு பின், கூச்சலிட்டவர்களை அதிகாரிகள் எச்சரித்து, அமர வைத்தனர். அரங்கில் அவ்வப்போது எழுந்த எதிர்ப்புகளால், பலர் சுதந்திரமாக கருத்து சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு : அனைவருமே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டாமென கேட்டுக் கொண்டனர். ஒழுங்கு முறை ஆணையத்தின் மீதும், மின் வாரிய அதிகாரிகள் மீதும், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். மின் வாரிய செயல்பாடுகளை, ஒழுங்கு முறை ஆணையம் சரியாகக் கண்காணிக்கவில்லை. மின்சார சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரிவித்தனர். மின் பிரச்னைகளை சரி செய்ய விதவிதமான பட்டியல் வைத்து, லஞ்சம் வசூலிப்பதாகவும், மின் வாரியம் ஊழலில் திளைத்துவிட்டது என்றும் காரசாரமாக குற்றஞ்சாட்டினர். குறிப்பிட்ட சில தனியார் நிறுவனத்திடம், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதால், அதிக நஷ்டம் ஏற்படுகிறது என, மின்சாரப் பொறியாளர்கள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த காந்தி புகார் கூறினார். திருமுருகன் என்பவர், நேரடியாக ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு தெரிவித்ததால், "எங்களை அவமானப்படுத்த வேண்டாம் என, ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். 
இறுதியில், மின் வாரியத் தலைவர் ராஜிவ்ரஞ்சன் பதில் கூறினார். காலை முதல் மாலை வரை, கூச்சலும், குழப்பமும் தான் கூட்டத்தின் பிரதானமாக இருந்தது; கூச்சலில் துவங்கிய கூட்டம், மாலை 6.30 மணிக்கு பரபரப்புடன் முடிந்தது.

அக்கறையற்ற அரசியல் கட்சிகள் : கட்டண உயர்வு குறித்து, சாதாரண வியாபாரி முதல், பெரும் தொழிலதிபர்கள் வரை, கருத்து சொல்ல வந்திருந்தனர். ஆனால், கட்டணம் உயர்த்த வேண்டாமென அவ்வப்போது ஆர்ப்பரிக்கும், அரசியல் கட்சிகள் சார்பில் எந்த பிரதிநிதிகளும் வரவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மட்டும், மின் ஊழியர் மத்திய அமைப்பு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர். அறிக்கைகள் விட்டு, அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள், அதிகாரப்பூர்வமாக கருத்துகளை கேட்கும் கூட்டத்துக்கு, தங்கள் பிரதிநிதிகளை அனுப்பாதது, நுகர்வோரை வருத்தமடையச் செய்துள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-


மதுரை: வெறி நாய்க்கடிக்கு முறையான தடுப்பூசி போடாததால், "ரேபிஸ்' நோய் தாக்கி,



மதுரை: வெறி நாய்க்கடிக்கு முறையான தடுப்பூசி போடாததால், "ரேபிஸ்' நோய் தாக்கி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், விவசாயி செல்வபாண்டி, 29, சிகிச்சை பெறுகிறார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சிங்காரகோட்டையைச் சேர்ந்த இவரை, 40 நாட்களுக்கு முன், நாய் கடித்தது. தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டார். டாக்டர் அறிவுரைப்படி, தொடர் தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும். ஆனால், செல்வபாண்டி முறையாக ஊசி போடவில்லை. நேற்று முன் தினம் இரவு கால்களில் வலி ஏற்பட்டது. உணவு சாப்பிட முடியவில்லை. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனையில், "ரேபிஸ்' நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், தனி "செல்'லில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. "ஐயோ, என் மனைவியை 
விட்டு போக போறனே' என்று அவர் அழுதது பரிதாபமாக இருந்தது.
பரவும் பின்னணி: உலக சுகாதார அமைப்பில், "ரேபிஸ்' நோய் ஆலோசகராக உள்ள மதுரை மூளை நரம்பியல் சிகிச்சை டாக்டர் வி.நாகராஜன் கூறியதாவது:நாய் மட்டுமல்ல, எந்த மிருகம் கடித்தாலும்,கீறினாலும் "ரேபிஸ்' கிருமி, நரம்பு வழியாக தண்டுவடத்திற்கு செல்லும். பின், மூளைக்கு சென்று முகுளம், நடுமூளையில் சுவாசிக்க தூண்டும் நரம்பை பாதிக்கும். நினைவுகளை கொண்ட மூளைப்பகுதியை பாதிக்காது. மிருகங்களின் வாயில்கூட "ரேபிஸ்' கிருமி ஒட்டியிருந்து ஆபத்தை ஏற்படுத்தும். கடிப்பட்ட இடத்தில், உடனடியாக சலவை சோப்பால், கொட்டும் குழாய் நீரில், 15 முறை திரும்ப திரும்ப கழுவ வேண்டும். இதனால் 98 சதவீதம் "ரேபிஸ்' கிருமி இறக்க வாய்ப்புண்டு. பின், கடியின் தன்மையை பொறுத்து, மூன்று முறை அல்லது அதற்கு மேல் தடுப்பூசி போட வேண்டும்.தடுப்பூசியால் 80 சதவீதம் மட்டுமே இந்நோயை தடுக்க முடியும். முழுமையாக தடுக்க "இமினோ குளோபின்' என்ற 
மருந்தை, கடிப்பட்ட இடத்தைச் சுற்றி 30 சதவீதமும், கை சதைப் பகுதியில் 70 சதவீதமும் போட வேண்டும். மூளையை பாதித்த பின், தடுப்பூசி போடுவது பயனற்றது. காரணம், அக்கிருமி மூளை நரம்புகளை பாதித்திருக்கும். எனவே, கடிப்பட்ட நாள் முதல் 10 நாட்களுக்குள்கிருமியை கொல்ல வேண்டும். இல்லாதபட்சத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கூட மூளையை தாக்கும். இவ்வாறு கூறினார். 
ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டும் தினமலர்: நாய்க்கடியால் "ரேபிஸ்' நோய் தாக்கி உயிருக்கு போராடுபவர்கள் குறித்து விழிப்புணர்வு தேவை என ஒவ்வொரு முறையும் தினமலர் சுட்டிக்காட்ட தவறியதில்லை. ஆனால், ஏனோ மக்கள் இந்த விஷயத்தில் அக்கறை எடுக்காமல் விட்டுவிடுவதால் ஒவ்வொரு முறையும் உயிரை இழக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இனியாவது இந்த நிலை மாறுமா