ஆதரவாளர்கள்

புதன், 1 பிப்ரவரி, 2012

மதுரை: வெறி நாய்க்கடிக்கு முறையான தடுப்பூசி போடாததால், "ரேபிஸ்' நோய் தாக்கி,



மதுரை: வெறி நாய்க்கடிக்கு முறையான தடுப்பூசி போடாததால், "ரேபிஸ்' நோய் தாக்கி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், விவசாயி செல்வபாண்டி, 29, சிகிச்சை பெறுகிறார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சிங்காரகோட்டையைச் சேர்ந்த இவரை, 40 நாட்களுக்கு முன், நாய் கடித்தது. தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டார். டாக்டர் அறிவுரைப்படி, தொடர் தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும். ஆனால், செல்வபாண்டி முறையாக ஊசி போடவில்லை. நேற்று முன் தினம் இரவு கால்களில் வலி ஏற்பட்டது. உணவு சாப்பிட முடியவில்லை. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பரிசோதனையில், "ரேபிஸ்' நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரியில், தனி "செல்'லில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. "ஐயோ, என் மனைவியை 
விட்டு போக போறனே' என்று அவர் அழுதது பரிதாபமாக இருந்தது.
பரவும் பின்னணி: உலக சுகாதார அமைப்பில், "ரேபிஸ்' நோய் ஆலோசகராக உள்ள மதுரை மூளை நரம்பியல் சிகிச்சை டாக்டர் வி.நாகராஜன் கூறியதாவது:நாய் மட்டுமல்ல, எந்த மிருகம் கடித்தாலும்,கீறினாலும் "ரேபிஸ்' கிருமி, நரம்பு வழியாக தண்டுவடத்திற்கு செல்லும். பின், மூளைக்கு சென்று முகுளம், நடுமூளையில் சுவாசிக்க தூண்டும் நரம்பை பாதிக்கும். நினைவுகளை கொண்ட மூளைப்பகுதியை பாதிக்காது. மிருகங்களின் வாயில்கூட "ரேபிஸ்' கிருமி ஒட்டியிருந்து ஆபத்தை ஏற்படுத்தும். கடிப்பட்ட இடத்தில், உடனடியாக சலவை சோப்பால், கொட்டும் குழாய் நீரில், 15 முறை திரும்ப திரும்ப கழுவ வேண்டும். இதனால் 98 சதவீதம் "ரேபிஸ்' கிருமி இறக்க வாய்ப்புண்டு. பின், கடியின் தன்மையை பொறுத்து, மூன்று முறை அல்லது அதற்கு மேல் தடுப்பூசி போட வேண்டும்.தடுப்பூசியால் 80 சதவீதம் மட்டுமே இந்நோயை தடுக்க முடியும். முழுமையாக தடுக்க "இமினோ குளோபின்' என்ற 
மருந்தை, கடிப்பட்ட இடத்தைச் சுற்றி 30 சதவீதமும், கை சதைப் பகுதியில் 70 சதவீதமும் போட வேண்டும். மூளையை பாதித்த பின், தடுப்பூசி போடுவது பயனற்றது. காரணம், அக்கிருமி மூளை நரம்புகளை பாதித்திருக்கும். எனவே, கடிப்பட்ட நாள் முதல் 10 நாட்களுக்குள்கிருமியை கொல்ல வேண்டும். இல்லாதபட்சத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கூட மூளையை தாக்கும். இவ்வாறு கூறினார். 
ஒவ்வொரு முறையும் சுட்டிக்காட்டும் தினமலர்: நாய்க்கடியால் "ரேபிஸ்' நோய் தாக்கி உயிருக்கு போராடுபவர்கள் குறித்து விழிப்புணர்வு தேவை என ஒவ்வொரு முறையும் தினமலர் சுட்டிக்காட்ட தவறியதில்லை. ஆனால், ஏனோ மக்கள் இந்த விஷயத்தில் அக்கறை எடுக்காமல் விட்டுவிடுவதால் ஒவ்வொரு முறையும் உயிரை இழக்க வேண்டிய அவலம் ஏற்படுகிறது. இனியாவது இந்த நிலை மாறுமா

கருத்துகள் இல்லை: