தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில், சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி வருமானவரிச்சான்றை சம்பந்தப்பட்ட பகுதி வட்டாட்சியரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழை துணை வட்டாட்சியரும் வழங்குவார்கள். தாழ்த்தப்பட்டோருக்கு வட்டாட்சியரும், பழங்குடியினருக்கு மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியரும் சாதி சான்றிதழை வழங்க அதிகாரமுடையவர்கள். ஆதரவற்றோர் சான்றிதழை மாவட்ட சமூக நல அலுவலரும், H.I.V பாதிக்கப்பட்டோர் மற்றும் திருநங்கையருக்கான சான்றை அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அலுவலரும் வழங்குவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்று துப்புரவுப்பணியாளர்களின் குழந்தைகளுக்கான சான்றிதழை மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் பெறலாம். பிற அலுவலகங்களில் பணிபுரியும் துப்புரவுப்பணியாளர்களின் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் சான்றிதழை வழங்குவார். விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால் ரேண்டம் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தனியார் பள்ளிகளின் தொடக்க வகுப்புகளில் இட ஒதுக்கீடு பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக