ஆதரவாளர்கள்

திங்கள், 18 ஏப்ரல், 2016

ஊடகம் நினைத்தால் மக்களுக்கு உண்மையில் நல்லது செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக இந்தப் பதிவு

ஊடக தோழர்களே!
பிரச்சனைகளை பேசுவது மட்டுமல்ல அதற்கு தீர்வும் தரவேண்டும். அந்த வகையில் மக்களுக்கு தேவையான நிகழ்ச்சியை நடத்தும் முன்னோடி ஊடகம் மக்களால் வாழ்த்தப்படும் என்பதற்கு உதாரணமே இந்தப் பதிவு. 
நிகழ்ச்சியைப் பார்த்த பலர் இலஞ்சம் கொடுக்காமல் அரசின் திட்டங்களையும், பயன்களையும் பெற்று பயனடைந்த பயனாளிகளின் வெற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஒவ்வொரு குடிமகனும் தனது தேவைகளை இலஞ்சம் கொடுக்காமல் பெற்றோம் என்ற வெற்றி செய்திகள் வரவேண்டும். அதுவரை இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கிட நன்மக்களாகிய உங்களின் ஆதரவு தேவை.

இது கேப்டன் நியுஸ் சானலின் "காகிதத்தில் ஓர் ஆயுதம் நிகழ்ச்சி" பற்றிய பதிவு


இது ஒரு நேரலை நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 க்கு ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் சுயமரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இலஞ்சம் கொடுக்காமல் ஒவ்வொரு குடிமகனும் மத்திய மாநில அரசின் திட்டங்கள் பயன்களைப் பெற வழிகாட்டப்படுகின்றது.

நேரலையில் அலைபேசியில் தொடர்பு கொள்ளும் நேயர்களின் தகவல் சட்டம் மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகள் மீது தகவல் சட்டம் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி? துரையின் பயன்கள் பிரச்சனைகள் தீர்வுக்கு ஆலோசனைகள் தீர்வுக்கான சந்தேகங்கள் மற்றும் அவர்களின் தேவைகள் அல்லது தீர்க்கபடாத பிரச்சனைகளுக்கு தகவல் சட்டத்தை எப்படி கையாள்வது மற்றும் தீர்வு பெறுவது என்று உடனடியாக ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி ஆகும்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அரசுத்துறையும், அதன் செயல்பாடுகள் பயன்கள் செயல்பாடு குறித்து சொல்லி மக்களுக்கு விளிப்புநேவு தரும் நிகழ்ச்சியாகும்.

அந்த வகையில் 
இதுவரை கீழ்காணும் துறைகளின் பயன்கள் சட்டங்களின் பயன்கள் தெரிவிக்கபட்டு உள்ளது 
1. தகவல் சட்டம் 
2. தகவல் சட்டம் மூலம் தன தேவைகளை பெறுவது 
3. எப்படி? 
4. கல்விக்கடன் 
5. குடும்ப அட்டை 
6. வீடு நிலம் வாங்க 
7. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 
8. மின் இணைப்பு மற்றும் மின்தடை புகார் 
9. பட்டா பெயர் மாற்றம் 
10. வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் திட்டங்கள்  
11. தோட்டக்கலை செயல்பாடுகள் திட்டங்கள் 
12. சமூக நலத்துறையில் பெண்களுக்கான திட்டங்கள் பயன்கள் 
13. குழந்தைகள் நலன் 
போன்ற
 துறைகளின் செயல்பாடுகள், மக்களுக்கு அளிக்கும் சேவைகள், பயன்கள், மக்கள் தங்கள் தேவைகளுக்கு யாரிடம் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் ? விண்ணப்பம் செய்தால் எத்துனை நாட்களுக்குள் தீர்வு? குறிப்பிட்ட நாட்களுக்குள் சேவை அளிக்க தவறினால் யாரிடம் புகார் அளிப்பது?
மேற்கன் துறைகளில் மக்கள் இலஞ்சமின்றி அனைத்து பயன்களையும் பெற தகவல் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சொல்லிக்கொடுத்துள்ளேன்.
இதுபோல வாரம் ஒரு துறை வீதம் இனி வரும் வாரங்களில் இன்னும் உள்ள மக்களுக்கு அத்தியாவிசய பயன்களை அளிக்க உள்ள அனைத்து துறைகளைப் பற்றி சொல்ல இருக்கின்றேன்.

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களின் பிரச்சனைக்கு நேரலையில் தீர்வு சொல்லும் நிகழ்ச்சியை வேறு எந்த தொலைக்காட்சியும் செய்யவில்லை.

இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் 
முதன் முறையாக மக்களுக்கான நிகழ்ச்சி நடத்தும் தொலைக்காட்சிக்கு உங்களது ஆதரவை தெரிவித்து வாழ்த்துங்கள். 

நிகழ்ச்சியைப் பார்த்த பலர் இலஞ்சம் கொடுக்காமல் அரசின் திட்டங்களையும், பயன்களையும் பெற்று பயனடைந்த பயனாளிகளின் வெற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஒவ்வொரு குடிமகனும் தனது தேவைகளை இலஞ்சம் கொடுக்காமல் பெற்றோம் என்ற வெற்றி செய்திகள் வரவேண்டும். அதுவரை இதுபோன்ற நிகழ்ச்சிகள் மக்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு காட்சி ஊடகமும் வழங்கிட நன்மக்களாகிய உங்களின் ஆதரவு தேவை.

மின்வாரியத்தின் பயன்கள் செயல்பாடுகள் குறித்த தொகுப்பு கானொளியில் காண இந்த இணைப்பை சொடுக்கவும் 

மகிழ்வுடன் 
பாலசுப்ரமணியன் 

கருத்துகள் இல்லை: