ஆதரவாளர்கள்

Wednesday, April 13, 2016

நேரலை நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 க்கு ஒளிபரப்பாகிறது.

இது நான் பங்கேற்று வரும் கேப்டன் நியுஸ் சானலின் "காகிதத்தில் ஓர் ஆயுதம் நிகழ்ச்சி" பற்றிய பதிவு

இது ஒரு நேரலை நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 க்கு ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் தொடர்பு கொள்ளும் நேயர்களின் தகவல் சட்ட சந்தேகங்கள் மற்றும் அவர்களின் தேவைகள் அல்லது தீர்க்கபடாத பிரச்சனைகளுக்கு தகவல் சட்டத்தை எப்படி கையாள்வது மற்றும் தீர்வு பெறுவது என்று உடனடியாக ஆலோசனை வழங்கி வருகின்றேன்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அரசுத்துறையும், அதன் செயல்பாடுகள் பயன்கள் செயல்பாடு குறித்து தொடர்ந்து நெறியாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றேன்.

இதுவரை

தகவல் சட்டம் 

தகவல் சட்டம் மூலம் தன தேவைகளை பெறுவது எப்படி? 

கல்விக்கடன் 

குடும்ப அட்டை 

வீடு நிலம் வாங்க 

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 

மின் இணைப்பு மற்றும் மின்தடை புகார் 

பட்டா பெயர் மாற்றம் 

வேளாண்மை 

தோட்டக்கலை

போன்ற துறைகளின் செயல்பாடுகள், மக்களுக்கு அளிக்கும் சேவைகள், பயன்கள், மக்கள் தங்கள் தேவைகளுக்கு யாரிடம் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும் ? விண்ணப்பம் செய்தால் எத்துனை நாட்களுக்குள் தீர்வு? குறிப்பிட்ட நாட்களுக்குள் சேவை அளிக்க தவறினால் யாரிடம் புகார் அளிப்பது?

மேற்கன் துறைகளில் மக்கள் இலஞ்சமின்றி அனைத்து பயன்களையும் பெற தகவல் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சொல்லிக்கொடுத்துள்ளேன்.

இதுபோல வாரம் ஒரு துறை வீதம் இனி வரும் வாரங்களில் இன்னும் உள்ள மக்களுக்கு அத்தியாவிசய பயன்களை அளிக்க உள்ள அனைத்து துறைகளைப் பற்றி சொல்ல இருக்கின்றேன்.

"உலக சாதனை" ..

3-4-16 வரை தொடர்ந்து 10 வாரங்கள் இந்நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம் கேப்டன் நியுஸ் சானல் உலக சாதனை படைத்துள்ளது.

ஆம்

ஒரே நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒரே சிறப்பு விருந்தினரைக் கொண்டு நேரலை நிகழ்ச்சி அதிக வாரங்கள் தொடர்ந்து நடத்திவரும் சாதனை

இதுவரை உலகத்தில் எந்த ஒரு சானலும் செய்யாதது.

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களின் பிரச்சனைக்கு நேரலையில் தீர்வு சொல்லும் நிகழ்ச்சியை நிகழ்ச்சி வேறு எந்த தொலைக்காட்சியும் செய்யவில்லை.

உங்கள் ஒரு நிமிட நேரத்தை ஒதுக்கி அலைபெசிமூலம் அல்லது மின்னஞ்சல் மூலமாக சாதனைகளை படைத்துவரும் கேப்டன் நியுஸ் தொலைக்காட்சிக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கமளியுங்கள். 

நல்லது யார் செய்தாலும் அவர்களை மனதார பாராட்டுவது நாட்டுக்கு நல்லது. 

கேப்டன் நியுஸ் தொலைக்காட்சி தொடர்புக்கு 

Captain Media PVT LTD,

2A/2 Mettukuppam Road,

Vanagaram,

Maduravoyal,

Chennai 600095.

Phone No : 044- 30134567

Fax No : 044- 30134568

மின்னஞ்சல் மூலமாக உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க : jothiramalingam@captainmedia.in, 

news@captainmedia.in

முதன் முறையாக மக்களுக்கான நிகழ்ச்சி நடத்தும் தொலைக்காட்சிக்கு உங்களது ஆதரவை தெரிவிப்பதன் மூலம் இந்நிகழ்ச்சி அனைவரையும் சென்றடையட்டும்.

குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடது என்ற அன்பான கோரிக்கைகள் எனக்கு வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அதைவிட அதிகமாக நிகழ்ச்சி வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையும் வந்தவண்ணம் உள்ளது.

அனுபவங்கள்; 

தொலைகாட்சி நிகழ்ச்சி பார்த்து அதில் தெரிவித்ததை போல செயல்பட்டு இலஞ்சம் கொடுக்காமல் 30 நாட்களில் மின்

இணைப்பு பெற்றுவிட்டதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஒரு நண்பர் நன்றியுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியைப் பார்த்து குடும்ப அட்டைக்காக போராடிக்கொண்டு இருந்த விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1986 ஆம் ஆண்டு முதல் பட்டா பயர் மாற்றம் செய்ய இயலாமல் இருந்த சென்னை நண்பருக்கு இதில் தெரிவித்த கருத்துக்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்து பாராட்டியுள்ளார்.

இதுபோல் பல மாவட்டங்களில் இருந்து இலஞ்சம் கொடுக்காமல் அரசின் திட்டங்களையும், பயன்களையும் பெற்றோம் என்ற வெற்றி செய்திகள் வரவேண்டும். அதற்க்கு உங்களின் ஆதரவு தேவை.

மகிழ்வுடன் 

பாலசுப்ரமணியன் 

www.voiceofindian.org

No comments: