ஆதரவாளர்கள்

செவ்வாய், 22 மார்ச், 2016

இதையும் கட்சியின் 2016 தேர்தல் அறிக்கையில் சேர்த்தால்.......

இதையும் கட்சியின் 2016 தேர்தல் அறிக்கையில் சேர்த்தால்.......

1) மாசு கக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட மாசு அகற்றும் கருவிகள் அரசே முதலீடு செய்து நிறுவிவிட்டு மாசின் அளவுக்கேற்ப ஒவ்வொரு மாதமும் மீட்டர் வைத்து வசூலிப்பது. அனைத்து சிறு குறு நடுத்தர பெரிய நிறுவனங்கள் அனைத்திலும் மாசு கட்டுப்படுத்தும் பொறுப்பை அரசே ஏற்கவேண்டும்.

இதன்மூலம் தனியார்கள் திருட்டுத்தனமாக இரவில் கேசை திறந்துவிடுவது கழிவுகளை கொட்டுவதை தடுக்கலாம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்

2) சிறு குறு நடுத்தர பெரிய சாயப்பட்டறைகளில் வரும் சாயக்கழிவுகளை அரசே பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிப்பு செய்து நீரை வெளியேற்றும் அல்லது மறு சுழற்ச்சிக்கு பயன்படுத்தும். இதன் மூலம் சாயக்களிவுகள் எவ்வகையிலும் நிலம் நீர் காற்றில் கலக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்

இப்படி சிறிய சாயப்பட்டறைகள் முதல் பெரிய சாயப்பட்டறைகள் வரை அனைவரிடமும் பைப்லைன் மூலம் சாயக் கழிவுகளை பெற்று அளவு கணக்கீடு செய்து சுத்தம் செய்வதற்காக மாதம் ஒரு தொகை வசூலிக்கலாம்

இதனால் சாயக்கழிவுகள் நள்ளிரவில் கள்ளத்தனமாக ஆற்றில் கலப்பது தடுக்கப்படும் சிறு குறு சாயப்பட்டறைகள் தொழில் காக்கப்படும் வேலை வாய்ப்பு தொழில் முனைவோர் பாதுகாப்புடன் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

3) 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் அனைவரும் விவசாயம் செய்யும் நாட்களில் விவசாயப் பணிக்கு மட்டும் 100 நாட்களில் 70 நாட்கள் விவசாயப் பணிக்கும் மீதி முப்பது நாட்கள் ஏறி குளம் கால்வாய் தூர் வாரும் பணிக்கும் செல்ல உத்தரவு. இதன் மூலம் விவசாயம் சார்ந்த திட்டங்கள் பணிக்கு மனித வளம் பயன்படும்

4) ஏறி குளம் நீர் தேக்கங்களில் உள்ள வண்டல்களை விவசாயிகள் இலவசமாக எடுத்து சென்று நிலங்களில் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் செயற்கை உரம் அவசியமில்லாம இயற்கை முறை விவசாயம் செழிக்கும். இரசாயனமில்லா விஷம் எனும் பூச்சிக் கொல்லிகள் இல்லாமல் இயற்க்கை விவசாய உற்பத்தி பெருகும். மனிதர்களுக்கு வரும் பல நோய்கள் தடுக்கபட்டு ஆரோக்கியமுள்ள மனித வளம் உருவாகும்.

5) அனுமதிக்கும் பகுதியில் குறிப்பிட்ட காலங்களில் ஏறி குளங்களில் உள்ள களிமன்களையும், ஆற்று மணலையும் செங்கல் சூலை வைத்திருப்பவர்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

இதனால் செங்கல் விலை குறையும். கட்டுமானத் தொழில் வளரும். இதை பயன்படுத்தி புதிய முறையில் தரைகள் தரைக் கற்களும் உற்பத்தி செய்ய வாய்ப்பு. விவசாயப் பகுதி தொழில் வளம் வேலைவாய்ப்பு பெருகும்

6) தகவல் உரிமைச் சட்டத்தை 10 ஆம் வகுப்பு பாடத்திலும் , தமிழ்நாடு தேர்வாணையத் தேர்விலும் கேள்விகளாக கேட்கப்படும்.

தகவல் சட்டம் மூலம் விண்ணப்பம் எழுத தெரிந்த யாரும் இலஞ்சம் கொடுக்க மாட்டார்கள் ஆகவே கொடுக்க ஆள் இல்லாத நிலையில் வாங்க முடியாமல் அலுவலர்கள் திருந்த வாய்ப்பு. வெளி நாடுகளைப் போல கீழ் மட்ட ஊழல் முற்றிலும் ஒழியும்.

7) மாநிலக் கல்வி திட்டத்தில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பிற்குள் ஓவொரு வகுப்பிலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முழுமையாக பாடமாக வைக்கப்படும்.

இதன் மூலம் ஒவ்வொருவரும் சட்டத்தை மதிக்க கற்றுக் கொள்வார்கள். அனைவருக்கும் சட்டம் தெரியும் என்பதால் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் குற்றங்கள் குறையும்.

8) பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை அரசு அலுவலகங்களும் அதன் செயல்பாடுகள் குறித்த பாடம் சேர்க்கப்படும்.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனிநபர் கண்காணிப்பகமாக செயல்பட்டு அரசு அலுவலர்கள் செயல்பாட்டையும் அலுவலக செயல்பாட்டையும் கண்காணிப்பு செய்ய முடியும்

இதனால் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு அலுவலகத்தின் செயல்பாடு மற்றும் மக்களுக்கு ஆற்றும் பணிகள் அதற்கு விண்ணப்பம் செய்யும் முறைகள், அறிந்துகொள்ள முடியும். அந்த அலுவலர் தன பணிக்கடமையை செய்கின்றாரா.? சரியாக செய்கிறாரா? என்று ஒவ்வொரு குடிமகனும் கண்காணிக்க முடியும்.

ஒரு சாமானியன் தனது தேவைக்கு எந்த அலுவலகத்தில் எந்த அலுவலரை சந்திக்க வேண்டும். அந்த பொறுப்பான அலுவலரிடம் மனு அளித்தால் எத்தனை நாட்களில் தீர்வு செய்யப்படும், அவ்வாறு தீர்வு செய்ய காலதாமதம் ஏற்பட்டால் புகார் பெற்று நடவடிக்கை எடுக்கும் அலுவலர் யார் என்ற விபரம் தெரிந்திருந்தால் இடைத்தரகர்கள் தேவையில்லை

ஒவ்வொருவரும் அவர் அவர் பிரச்சனைக்கு நேரடியாக அலுவலகம் சென்று யாரிடம் எப்படி விண்ணப்பம் செய்வது என்பதை அறிந்தவர்கள் இலஞ்சம் கொடுக்க தேவையில்லை. அலுவலக நடைமுறைகள் தெரிந்த யாரும் இலஞ்சம் கொடுக்க மாட்டார்கள் இலஞ்சம் ஒழியும்.

எஞ்சினியரிங் முடித்த மாணவர் மணியார்டர் பாரத்தை நிரப்ப தெரியவில்லை என்ற நிலை மாறும்

9) 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞ்சர்களுக்கு சுய தொழில் முனைவோர் பயிற்சி அளித்து அதில் சிறப்பாக தேர்வு பெரும் நபர்களுக்கு வட்டியில்லாக் கடன் கொடுத்து தொழில் வளர்ச்சிக்கு அரசே உதவும்.

(ஏற்கனவே மத்திய அரசின் திட்டத்தில் 100 கோடி வரையில் பினையமில்லாமல் கடன் கொடுக்க வகையும் செய்யபட்டு இருந்தது தற்பொழுது 100(1கோடி) வரை எவ்வித பிணையம் உத்திரவாதம் இல்லாமல் கடன் வழங்க அதே திட்டம் அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை யாருமே அந்தக் கடனைக் கேட்டு விண்ணப்பம் கூட செய்யவில்லை. இதை கிடைக்க செய்தாலே இந்த திட்டம் வெற்றிதான்.)

10) ஆபாசம் வன்முறைக் காட்சிகளை வீட்டின் வரவேற்பு அறைக்கு கொண்டுவந்து கொட்டி பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கொட்டும் தொலைக்காட்சி உள்ளிட்ட காட்சி ஊடகங்கள் ஒளிபரப்பிடும் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் தணிக்கை முறை சட்டம் செய்வோம்

(அதாவது காலை மாலை(குடும்பத்தில் பெற்ற பிள்ளைகளுடன் பெற்றோர்கள் உடன் அமர்ந்து பார்க்கும் வாய்ப்புள்ள நேர்வுகளிலாவது ) நேரங்களிலும் இரவு நேரங்களிலும் ஆபாச வன்முறைக் காட்சிகளை ஒலிபரப்பு செய்ய தடை, கலாசார சீரழிவுக்கு வித்திடும் கள்ளக்காதல் களவுக் களியாட்டம் போன்ற கதைகளை மையமாக வைத்து நாடகங்கள் ஒளிபரப்பிட தொலைக் காட்சிகளுக்கு கட்டுப்பாடு. ரியாலிட்டி சோ என்று காமக் களியாட்டங்கள் ஒளிபரப்பிட கட்டுப்பாடு. இப்படி இன்னும் குழந்தைகள் மனதை பாதிக்கும் அனைத்து காட்சிகளையும் காட்ட கட்டுப்பாடு விதிக்கும் சட்டம் .

இதனால் பாலியல் வன்முறை, பாலியல் தொந்தரவுகள் குறையும்.

10) தமிழ் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு பதிலாக தமிழர்களை விஞ்ஞானிகளாக ஆராய்ச்சியாளர்களாக புதிய உலகம் படிப்பவர்களாக அதாவது காதல் காமம் வன்முறை இல்லாமல் நல்ல கற்பனைக் கதைகள், காப்பியங்கள், காவியங்களாக எடுக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் வரி விலக்கு அதாவது திரைப்படங்களில் விண்ணுக்கும் மண்ணுக்கும் கற்பனைகளை காட்டினால் நமது பிள்ளைகள் நிஜத்திலும் சாதிப்பார்கள் அவர்களின் ஆராய்ச்சி திறன் வளரும் ஆராய்ச்சியில் ஆர்வம் பெருகும் புதிய கண்டுபிடிப்புகள் மீது பார்வை திரும்பும்.

11) மத்திய மாநில அரசுகளின் ஒவ்வொரு சட்டத் திருத்தம் பற்றியும் ஊடகங்கள் வாயிலாக விளக்கமாக மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

இது எதற்க்காக என்றால் , உதாரணமாக அரசின் திட்டங்கள் ஆரம்ப நிலையில் மக்களுக்கு தெரிவதில்லை திட்டம் செயலுக்கு வரும்போது தெரிகிறது அதனால் போராட்டம் ஆர்பாட்டம் என்று மனித வளம் வீணாகிறது.

உதாரணமாக கெயில்

எரிவாயுக் குழாய் பாதிக்கும் திட்டம் நிறைவேற்ற கெயில் நிறுவனம் தொடங்கபட்ட ஆண்டு 1976
1976 ஆம் ஆண்டே சுமார் 9000 கிலோ மீட்டர் தூரம் பைப் லைன் பதிக்க முடிவு
1976 ஆம் ஆண்டே அதன் வரைவு திட்டத்தில் எரிவாயு மட்டுமல்ல பிற்காலத்தில் பெற்றோலிய பொருட்களும் ரசாயனங்களும் அதே பைலைனில் எடுத்து செல்ல வழி வகை செய்யபட்டு உள்ளது.

அதற்காக சட்டம் புதிதாகவும் இருந்த சட்டங்களை இந்த திட்டம் நிறைவேற இடையூரு இல்லாவண்ணம் இயற்ரபட்டும் திருத்தபட்டும் இந்த திட்டம் செயல்முறைக்கு வந்தது 1976 ஆம் ஆண்டே அல்லது ஒவ்வொரு சட்ட திருத்தமும் ஏன் எதற்க்காக என்று அப்பொழுதே இந்த எம்பிக்களும் எம் எல் ஏ களும் விழித்திருந்தால் சரியாக திட்டம் நடைமுறைப் படுத்தும் விதம் பற்றிய விளக்கம் கேட்டு உண்மை நிலையை உணர்ந்து அதன் வழித்தடத்தை திருத்தி இருந்தாலோ அல்லது இது பற்றி அப்பொழுதே பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வு பெற உதவி செய்திருந்தாலோ இன்று பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலம் நிலம் காப்பாற்றபட்டு இருக்கும்
இன்று போராட்டம் என்ற பெயரில் மதிப்பில்லா மனிதவளம் வீவடிக்கப்படாமல் பொருள் விரையமில்லாமல் இருந்திருக்கும்
ஆகவே ஒவ்வொரு திட்டமும் வெளிப்படையாக இருக்க வேண்டும் அதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல மக்கள் பிரதிநிதிகள் தயக்கம் காட்டக் கூடாது அரசும் உடன்பட்டு விளக்கம் அளிக்க வேண்டும்

இந்த பத்தும் செய்தால் போதும் மற்ற எல்லாம் தானாக சரியாகிவிடும் தமிழ்நாடு தலை சிறந்து விளங்கும்

இது குறித்து மேலும் விளக்கம் விபரம் வேண்டுமெனில் முன்கூட்டியெ தேதி நேரம் தெரிவித்து அழைத்தால் நேரில் வந்து விளக்கிடவும் தயாராக இருக்கின்றேன் தேர்தல் அறிக்கையில் சேர்க்க முடியுமா என்று பாருங்கள் .

வரும் 2016 தேர்தலில் வெற்றிபெறவும் சிறப்பான ஆட்சி தரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதை உண்மையாக்கிட விழிப்புணர்வு பெற்ற குடிமக்களை உருவாக்குவோம்

பாலசுப்ரமணியன்
9042905783

கருத்துகள் இல்லை: