மதுரவாயலில் பயங்கரம்
கூலிப்படையை வரவழைத்து கணவன் கழுத்தை அறுத்து கொலை
கருத்துகள்
EPP Group Urges Governments to Use ...
அப்போது மகாலட்சுமியிடம் போனை வாங்கி வித்யாவும் பேசுவார். இதனால், வித்யா , மணிகண்டனுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவருடன் வித்யா அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். பெங்களூரில் இருந்து மணிகண்டன் செய்யாறு வரும்போது வித்யாவுக்கு போன் செய்து அழைப்பார். வித்யா கணவனிடம் பொய் சொல்லி விட்டு செய்யாறு சென்று மணிகண்டனுடன் தனிமையில் இருந்துள்ளார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் மணிகண்டனை, 3 நாட்கள் வித்யா உடன் இருந்து கவனித்துள்ளார். பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். ராஜ்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் போதையில் இருப்பார். இதை பயன்படுத்தி மணிகண்டன், வித்யா வீட்டுக்கே வந்துள்ளார். இந்த விவகாரம் ராஜ்குமாருக்கு தெரியவந்தது. மணிகண்டனுடன் உள்ள தொடர்பை விட்டு விடும்படி மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். போதையில் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி மணிகண்டனிடம் கூறி வித்யா அழுதுள்ளார். அதனால் அவர் பெங்களூரில் இருந்தபடி ராஜ்குமாரை தீர்த்து கட்ட கூலிப்படையை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலையில், மதுரவாயல் எஸ்ஐக்கள் செபஸ்டின், ஏழுமலை ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி 2 பைக்கில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அணிந்திருந்த உடைகளில் ரத்த கறை படிந்திருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில் அவர்கள் செய்யாறை சேர்ந்த கிரிதரன் (28), சரவணன் (24), செந்தில் (26), பெருமாள் (22) என்பது தெரிந்தது. இவர்கள் கூட்டாக சேர்ந்து ஆலப்பாக்கத்தில் ராஜ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது ராஜ்குமார் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டியபோது வித்யா ஏதும் தெரியாததுபோல் வந்துள்ளார்.
போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ராஜ்குமார் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் வித்யாவிடம் விசாரித்தபோது, கள்ளக்காதலன் மணிகண்டன் ஏற்பாடு செய்த கூலிப்படையினர் குடிபோதையில் இருந்த ராஜ்குமாரை கொலை செய்ததும், அவர்களை வரவழைத்து வித்யா உதவி செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரித்ததில், நேற்று முன்தினம் இரவு போதையில் ராஜ்குமார் தூங்கியதும் வில்லிவாக்கம் பெருமாள் கோயில் அருகே அறை எடுத்து தங்கியிருந்த கிரிதரன் உள்பட 4 பேருக்கும் வித்யா போன் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அதிகாலை 2.45 மணியளவில் வீட்டுக்கு வந்த கூலிப்படையினர், போதையில் தூங்கி கொண்டிருந்த ராஜ்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அங்கிருந்து பைக்கில் தப்பியபோது போலீசில் பிடிபட்டனர். ராஜ்குமாரை கொலை செய்ய செய்யாறை சேர்ந்த கூலிப்படை தலைவன் துரையிடம், மணிகண்டன் பேசியுள்ளார் என தெரியவந்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து வித்யா மற்றும் கிரிதரன் (28), சரவணன் (24), செந்தில் (26), பெருமாள் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் கூலிப்படை தலைவன் துரையை செய்யாறில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர் மீது செய்யாறு காவல்நிலையத்தில் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெங்களூர் சென்ற தனிப்படையினர் மணிகண்டனையும் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் மதுரவாயலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக