நல்லவர்கள் ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வரவேண்டும். நல்லவர்கள் எதற்கு ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். சாமானியனுக்கு அரசின் திட்டங்கள் இலஞ்சம் கிடைக்கவேண்டும் அவர்களின் உரிமைகளுக்காக அலைந்து திரியாமல் கிடைக்கவேண்டும் என்று தானே. நமது உரிமையை இலஞ்சம் இல்லாமல் அலைந்து திரியாமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் நாம் பெற தகவல் சட்டம் இருக்கு
எப்படி யாருக்கு எழுதவேண்டும்? என்று தெரியாதவர்களுக்கு இந்தியன் குரல் அளிக்கும் இலவச பயிற்ச்சியில் கலந்து நீங்கள் தெரிந்துகொண்டு உங்கள் அருகாமை மக்களுக்கு உதவலாம். அரசின் திட்டங்கள் முறைகேடுகளை கண்காணித்து கேட்கலாம் தவறு நடந்திருந்தால் தண்டனைபெற்றுத் தரலாம். தகவல் சட்டம் அறிந்த ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமான எதிர்கட்சியாக செயல்பட்டு அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்க எதிர்கட்சி தலைவருக்கு உள்ள எல்லா அதிகாரமும் கொண்டவனாக செயல்பட முடியும்.
தகவல் சட்டத்தின் கீழ் எல்லா அரசியல் கட்சிகளும்
1. தங்கள் உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கேட்கும் தகவல்கள் அனைத்து அளிக்கக் கடமைப்பட்டவை
2. கட்சியின் கொள்கை முடிவுகள் தலைமையின் செயல்பாடுகள் நிர்வாகிகள் தேர்வு வரவு செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தரவேண்டும்.
இதையெல்லாம் கேட்கும் அதிகாரமும் தன தேவைகளை இலஞ்சமின்றி பெறவும் தகவல் உரிமைச் சட்டம் இருக்கும்போது எதற்க்காக நாம் ஓடிக்கொண்டு இருக்க வேண்டும்? சிந்திப்போம் செயல்படுவோம்.
நமக்கு உடனடி தேவை நல்ல அரசியல் கட்சியோ அரசியல்வாதியோ அல்ல தகவல் சட்டம் அறிந்து கொள்ளவும் அதை செயல்படுத்துவதுமே அனைத்திற்குமான தீர்வு .
மதுரையில்; 28-5-16 அன்று காலை 10 மணிக்கு பயிற்சி மற்றும் பிரச்சனைகளுடன் வருவோருக்கு மனுக்களை எழுதித்தந்து உதவி நடைபெறும் இடம் மதுரை பசுமலை பேருந்து நிலையம் அருகில் சி எஸ் ஐ பாய்ஸ் ஹோம் பசுமலை மதுரை தொடர்புக்கு 9865577021
சென்னையில்; 29-5-16 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு பயிற்சி கும்பத் காம்ப்ளக்ஸ் முதல் தளம், 29, ரத்தன் பஜார் சென்னை 3 (பூக்கடை காவல் நிலையம் எதிரில்) தொடர்புக்கு 9445249202
திண்டுக்கல் மாவட்டம் பழனியில்;
11-6-16 அன்று காலை 10 மணிக்கு பயிற்சி , வாசவி திருமண மண்டபம், தெற்குரத வீதி பழநி திண்டுக்கல் மாவட்டம் தொடர்புக்கு 7010210199
நண்பர்களே
மேற்கண்ட பகுதியில் நடைபெறும் தகவல் சட்டம் பயிற்சியில் கலந்து இலஞ்சம் கொடுக்காமல் அலைந்து திரியாமல் நீங்களும் உங்கள் உரிமையைப் பெறலாம், உங்களது நண்பர்கள் மற்றும் சொந்தங்களுடன் நிகழ்வில் கலந்து பயன்பெறவும் இந்நிகழ்ச்சி குறித்து உங்கள் நண்பர்களுக்கும் சுற்றத்தார்க்கும் தெரியப்படுத்தி அவர்களும் பயன்பெற உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்
கேப்டன் தொலைக் காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.30 முதல் 11.30 வரையில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கு ஆலோசனை வழங்கும் "காகிதத்தில் ஓர் ஆயுதம்" நேரிலை நிகழ்ச்சி காணத்தவறாதீர்கள்
- இந்தியன் குரல்
இந்தியன் குரல் செய்தது ; 01-01-2015 வரை
16,000 கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன், நடவடிக்கை இல்லாமல் கிடந்த இரண்டு லட்சத்து எண்பதனாயிரம் (2,80,000) மேற்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் மனுக்கள் தீர்வு காண உதவி .
சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற , எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்.
நன்கொடை இல்லை உறுப்பினர் சந்தா இல்லை, பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - கொள்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக