இப்படி
படம் போட்டு செய்தி வெளியிடும் ஊடகத்தாருக்கு தெரியும். உலக வர்த்தக
அமைப்பின் விவசாய ஒப்பந்தம் திருத்தம்(2014) அமலானதால் கொள்முதல்
செய்யப்படவில்லை என்று.
ஆனாலும் மக்களை முட்டாள்களாக்கும் ஊடகங்களின் வஞ்சகம் வெளிச்சத்திற்கு வரும்போது அந்த ஊடகம் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் கையில் மாறி இருக்கும் என்பதை இன்றைய ஊடக முதலாளிகள் அறிய மாட்டார்கள். ஊடகங்களின் நிறுவனங்களே நிறுவன இந்திய அதிபர்களே உங்களையும் அனுப்பிட உலக வர்த்தக அமைப்பு திட்டம் தயாரித்து காலம் கனியக் காத்திருக்கின்றது அதற்கும் ஒப்பந்தம் ரெடி. இப்போ அவர்களின் விளம்பர வருவாயைதானே நம்பி இருக்கீங்க உங்களுக்கு ஆப்பு பின்னாடி வருது.
உலக விவசாய ஒப்பந்தத்தில் ஒரு விதி இப்படி சொல்லுது.
அதாவது விவசாய விளைபொருட்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சத்திற்கு மேல் அரசு கொள்முதல் செய்யக்கூடாது.
இப்படி ஒரு ஒப்பந்தம் உலக வர்த்தக அமைப்புடன் செய்துவிட்டு அதற்க்கு மேல எப்படி கொள்முதல் செய்ய இயலும். மேற்கொண்டு கொள்முதல் செய்தால் பல லட்சம் டாலர்களை இழப்பீடாக உலக வர்த்தக அமைப்பிற்கு தரவேண்டும். அது மொத்த மானியத் தொகையை விட கூடுதலாக உள்ளது பிறகு எப்படி அதான் இப்படி
ரேசன் கடைகள் விரைவில் மூடப்படும். மானியங்கள் பணமாக வழங்குவோம் என்று சொல்வார்கள். பிறகு மானியம் முழுதுமாக ஒருநாள் ரத்தாகும். அதாங்க( மானியம் இலவசம் காப்பீடு கொடுக்கக் கூடாது) அந்த ஒப்பந்தத்தில் சொல்லி இருக்காங்க அதை ஏற்று இந்தியா கடந்த டிசம்பர் 2014 1 ஆம் தேதிமுதல் 4 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் விவசாய ஒப்பந்தத் திருத்தத்தை ஏற்று கையொப்பம் இட்டுள்ளது
Problem in distributing ration rice in Tamilnadu | நெல் கொள்முதல் கடும் சரிவால் ரேஷன் அரிசி வழங்க திணறல்: அமோக விளைச்சல் இருந்தும் அரசிடம் கையிருப்பு குறைவு Dinamalar click http://www.dinamalar.com/news_detail.asp?id=1182603#.VN2-I8pw6to.blogger
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக