தகவல் சட்டத்தை பரப்புவதும் பயிற்சி அளிப்பதும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு இலஞ்சமின்றி தீர்வு பெற தகவல் சட்டத்தின் மூலம் பயிற்சி, இலவச உதவி மையங்களை நடத்துவது. - இந்தியன் குரல் அமைப்பின் நோக்கம்
நம்முடைய வாழ்க்கை என்பது எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் காரியங்களைச் செய்து முடிக்கின்றோமா? என்பதில்தான் இருக்கிறது.
ஒவ்வொரு நிமிடமும் ஏகப்பட்ட சிந்தனைகள் வந்து போகின்றன. இவற்றுள் நமக்கு மிகவும் பிடித்த மிக விருப்பமான
சிந்தனைகளையே இலச்சியங்களாக வைத்துக்கொண்டு அவற்றை அடைய நேரம் முயற்சி,
திட்டமிடுதல், செயல்படுதல் ஆகியவற்றில் முழுமையாக கவனம் செலுத்தினால்
போதும் இதுவே எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் முறை.
வெற்றிகரமான
வாழ்க்கைக்கு உதவும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் முறையையே நம்முடன்
பலகுகிரவர்களின் செயல்களும் நம்மைப் பாதிக்காமல் பாதுகாப்பாக வாழப்
பயன்படுத்த்கிக் கொள்ளலாம்.
வாழ்வில் நமக்குச் சூழ்நிலைகள்
சாதகமாக இருந்தாலும் சரி, பாதகமாக இருந்தாலும் சரி, சிறந்த நல்ல
எண்ணங்களையே தொடர்ந்து எண்ணவேண்டும். நல்லவற்றையே உறுதியாகவும் சிந்திக்க
ஒழுக்கத்தின் மீதும் நாம் முழு நம்பிக்கை வைத்தால் துணிச்சலுடன் ஒவ்வொரு
நாளும் நல்லதை மட்டுமே தொடர்ந்து செய்வோம் நிம்மதியாகவும் வாழ்வோம்.
[பதுவோ,
க்நல்ல கிடைக்காததோ உங்கள் குற்றம் அல்ல. இதையெல்லாம் மீறி நீங்கள்
சாதித்துக் காட்டாததுதான் உங்கள் குற்றம். 'இழந்த சொர்க்கம்' நூலை எழுதிய
மில்டன் தான் 'சொர்க்கத்தை நரகமாக்குவதும், நரகத்தை சொர்க்கமாக்குவதும்
நமது மனம்தான்' என்றார். இவர் எதற்க்காக இப்படி சொன்னார்? இவர் பார்வை
இழந்த நிலையில் 'இழந்த சுவர்க்கம்' நூலை இவர் சொல்லச் சொல்ல இவரது
மூன்றாவது மனைவிதான் எழுதி முடித்தார்.
இழந்த சொர்க்கம் நூலை
எழுத முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டபோதும் எழுதி முடிக்கவேண்டும் என்பதில்
மில்டன் உறுதியாக இருந்தார். இதனால் தான் இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது.
பார்வைத் திறன் குறைந்ததால் இனி எழுத முடியாது என்று சிந்திக்காமல்
கண்டிப்பாக எழுதி முடிப்பேன் என்று சிந்தித்ததால் தான் இந்த நூலை எழுதி
முடிக்க வாய்ப்புகள் அடுத்தடுத்து தோன்றின.
எனவே எல்லாச்
சூழ்நிலைகளிலும் நல்ல எண்ணங்களையே நம்பிக்கையுடன் சிந்தியுங்கள். உங்கள்
நம்பிக்கை உறுதியாக உறுதியாக எண்ணிய எண்ணங்கள் செயல்வடிவில் உருவாக
வாய்ப்புகள் அடுத்தடுத்து தென்படும் அதைக் கண்டு கொண்டு சென்றால்
வெற்றிமேல் வெற்றிதான்.
நாம் சிலரை மிகுந்த நன்றியுணர்வுடன்
மதிப்போம். அவர்களோ தங்கள் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கும் அளவுகூட
அன்பையும் மதிப்பையும் அளிப்பதில்லை. இதைப்போல நாம் மிகவும் மதிப்பவர்கள்
தூசியைப் போல நம்மை அவமதிக்கும்போது மீண்டும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள்.
உங்களுக்குத்தான் அவர்கள் தேவை, அவர்களுக்கு உங்கள் தேவை தேவையில்லை.
இதனால் தான் உங்கள் நினைவு அவர்கள் மனதில் பதியவில்லை என்று
எண்ணிக்கொள்ளுங்கள். மனம் சரியாகி நல்லதையே சிந்திப்பீர்கள்.
வெற்றிகரமாக
வாழ மட்டுமல்ல, மன அமைதிக்கும் நிகழ்சிகள் தாறுமாறாக நடக்கும்பொழுது
உறவுகள் நண்பர்கள் மீது வெறுப்பு இன்றி வாழ்வும் வாழவும் நல்ல எண்ணங்களையே
தொடர்ந்து சிந்திக்க உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் இதனால் உங்கள்
வாழ்க்கை தன்னம்பிக்கையுடன் கூடிய மனிதர்களைப் புரிந்துகொண்டிருக்கின்ற
உர்ச்சாகமான வாழ்க்கையாகவும் இருக்கும். - காநோபாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக