ஆதரவாளர்கள்

Saturday, February 15, 2014

மானத்தோடும் வீரத்தோடும் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமா?


நன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை
இந்தியன் குரல் நடத்தும் தகவல் உரிமைச் சட்டம் 2005 முதல் நிலை தொடர் பயிற்சி ஆரம்பம் கட்டணம் இல்லை விதிமுறைகள் உண்டு


23-3-14 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 9.30 மணி முதல் மலை 5 மணிவரை நடைபெறும்
இடம் கும்பட் காம்ப்ளெக்ஸ் முதல் தளம் , 29, ரட்டன் பஜார் , சென்னை 600003 (பூக்கடை காவல் நிலையம் எதிரில்)

முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி

விதிமுறைகளை கவனமாக படிக்கவும் பிறகு வருகையை பதியவும்

முன்பதிவு செய்வது எப்படி ?

உங்கள் பெயர், முகவரி, இ மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் 230314 என்று இந்த எண்ணையும் டைப் செய்து 9994658672 SMSஅல்லது www.voiceofindian.org என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளவும்.
இதற்கு முன் நடைபெற்ற பயிற்சியில் தொடர்ந்து கலந்துகொள்ள இயலாமல் அடுத்த நிலையை தவற விட்டவர்களும் கலந்துகொள்ளலாம்
கட்டணம் இல்லை விதிமுறைகள் உண்டு விதிமுறைகள் அறிய www.voiceofindian.org பார்க்க தமிழில் அறிய www.vitrustu.blogspot.in பார்க்கவும்

எ . பாலசுப்ரமணியன்
இந்தியன் குரல்

அரசு விடுமுறை நாட்களில் மட்டுமே பயிற்சி நடைபெறும்

பயிற்சியில் என்ன கற்றுக்கொள்ளலாம் ?

1 தகவல் சட்டம் பயன்

2 தகவல் சட்டம் மனுக்களை தயாரிப்பது எப்படி

3 நாம் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களின் மீது அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க தகவல் சட்டத்தை பயன்படுத்துவது எப்படி?

4 அலுவலக நடைமுறைகள் , விதிமுறைகள் அறிதல்.( வருவாய்த் துறை , காவல் துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித் துறை , மாவட்ட ஆட்சியர் பணிக்கடமைகள், தலைமைச் செயலகம் )

5 அலுவலர்கள் கடமைகள் அரசு துறைகளில் மக்களின் உரிமைகள்

6 அலட்சியம் காட்டும் அல்லது கடமை தவறும் அலுவலர்கள் மீது புகார் செய்து நடவடிக்கை எடுப்பது எப்படி

7 கல்விக்கடன் உள்ளிட்ட வங்கிக் கடன்கள் தகவல் சட்டத்தின்மூலம் பெறுவது எப்படி

.8 அரசு துறைகளின் பயன்கள் மக்கள் சாசனம்

9 தகவல் சட்டம் மூலம் ஊழலை ஒழிப்பது எப்படி?

10 நல்வாழ்வு வாழ வாழ்வியல் கல்வி

பயிற்சியில் கலந்துகொள்ள விதிமுறைகள் :-


1 பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் ஆறு (6) நிலை பயிற்சியும் தொடர்ந்து வரவேண்டும் இடையில் நின்று அடுத்த மாதம் கலந்துகொள்ள இயலாது மீண்டும் அடுத்த பிரிவில் முதல் மாதத்தில் இருந்துதான் வரவேண்டும் (முதல் பயிற்சிக்கும் அடுத்த பயிற்சிக்கும் 40 முதல் 50 நாட்கள் வரை இடைவெளி உண்டு )

2 மதிய உணவு குடிநீர் உள்ளிட்ட தங்களின் தேவைகளை தாங்களே எடுத்து வரவேண்டும்.

3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, 60 பக்கம் நோட்டு பேனா எடுத்துவர வேண்டும்

4 வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் வந்து போகும் செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்

5 பயிற்சி முடித்ததும் 15 நாட்கள் இடைவெளியில் குறைந்தபட்சம் மாதம் இரண்டு நாட்கள் உதவி மையம் நடத்திடல் வேண்டும்

6 பயிற்சி முடித்த பிறகு தங்களது சொந்த செலவில் அருகில் உள்ள மாவட்டத்தில் நடைபெறும் தகவல் சட்ட விழிப்புணர்வு கூட்டங்களில் கலந்து தகவல் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் மாதம் இரண்டு முறை சென்றுவரும் அளவு பொருளாதார வசதி இருக்க வேண்டும்.

7 மாணவர்கள் தவிர நிரந்தர வருவாய் வசதி உள்ளவர்களாக (அரசு அல்லது தனியார் துறையில் நிரந்தர பணி அல்லது சுய தொழில் ) இருப்பது கட்டாயம்.

8 தமிழ் அல்லது ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்த யாவரும் ஆர்வமுள்ள எந்த அமைப்பினரும் மதத்தினரும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்

9) பயிற்சியின் பொது அலைபேசி முடக்கி வைத்தல் வேண்டும்

10) பயிற்சியில் பங்கேற்கும் யாரும் பயிற்சி நடைபெறும் இடத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது (பத்திரிக்கையாளர்கள் தவிர)

.
(உணவு இடைவேளை பகல் 1.00 மணிமுதல் 2.00 மணி வரை

பயிற்சிக்கு வரும்பொழுது ;-

ஒரு வெள்ளைத்தாளில் கீழ்க்கண்ட முறைப்படி தங்களுடைய முழு விவரம் எழுதி எடுத்து வரவேண்டும் ( கையொப்பம் இட வேண்டாம் )

ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் பெயர் வலது மேல்பக்கம் பாஸ்போர்ட் அளவில் உங்களது புகைப்படம் ஒட்டி
உங்களது முழு முகவரி அலைபேசி எண் மின் அஞ்சல் வலைத்தளம் போன்ற விபரங்களை தனித் தாளில் எழுதிக்கொள்ளவும்

அதன் இணைப்பாக அடுத்த அடுத்த தனித் தாள்களில் ( இணைப்பில் உள்ள எந்தத் தாள்களிலும் கையொப்பம் இட வேண்டாம் உங்கள் பெயரையும் எழுத வேண்டாம் அச்சு பதிவில் கொண்டு வருவது சிறப்பு இந்த தாள்கள் உங்களது விபரங்கள் உண்மையானதாக இருப்பது அவசியம் )


1 தங்களின் பணி(அரசு /தனியார்/) விபரம்(நிரந்தரம்/தற்காலிகம்/கூலி ) அல்லது சுயதொழில் பற்றிய விபரம். மாணவர்கள் என்றால் மாணவர்கள் என்று குறிப்பிட்டுவிட்டு என்ன படிப்பு எந்த கல்லூரி என்ற விபரம்

2 பணியின் தன்மை உடல் உழைப்பா/ அலுவலக பணியாளர் மற்றும் வார விடுமுறை விபரம்


3 பணியில்/தங்கள் தொழிலில் செய்த சட்டத்திற்கு உட்பட்டு /சட்டத்தை மீறிய சம்பவம் அனுபவம்

4 சமூக சேவை செய்து வருபவரா ஆம்/இல்லை . ஆம் எனில் பயனாளிகள் விபரம் /பயனாளிகள் இரண்டு பேரின் பெயர் அலைபேசி எண்

5 பொது சேவை காரணமாக வருவாய் இழப்படைந்தவரா ஆம் எனில் ஏற்பட்ட
வருவாய் இழப்பு எந்த வகையில் ? பொது சேவை செய்து உடல்ரீதியில் பாதிப்படைந்தவரா? ஆம் எனில் பாதிப்புகள் யாரால் எப்படி என்ற விபரம் ?
6 தகவல் சட்டம் உபயோகம் தெரிந்தவரா ஆம் எனில் ஏதாவது ஒரு மனுவின் ஆரம்பம் முதல் முடிவு தீர்ப்பு வரை அல்லது எந்த நிலையில் உள்ளதோ அது வரை அனைத்து பக்கங்களின் ஒலி நகல்
7 இந்த பயிற்சியில் கலந்து கொள்வதன் நோக்கம் குறித்து பத்து வரிகளுக்கு குறையாமல் எழுதி இருக்க வேண்டும்.

உதவி மையம் நீங்கள் சார்ந்த உங்கள் அமைப்பின் பெயரிலேயே நடத்திடவேண்டும். அவ்வாறு அமைப்பு இல்லாத நண்பர்கள் இந்தியன் குரல் அமைப்பின் பெயரில் நடத்திட விரும்பினால் எழுத்துமூல அனுமதி பெறுவது அவசியம்.

உங்களது சுய முகவரியை இழக்காமல் உங்கள் அமைப்பின் பெயரிலேயே இந்தியன் குரல் அமைப்புடன் இணைந்து இருங்கள்
விபரம் அறிய www.voiceofindian.org வலைதளத்தை பார்க்கவும்
......................................................

சாதனை ;
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 10000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் பெற வழி காட்டியுள்ளோம்.

1.5 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட பல்வேறு வகையான பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது (தீர்வு செய்யாத, காலதாமதம் செய்யப்பட்ட மனுக்கள்) தீர்வு காண உதவி செய்துள்ளோம்

கடமையை செய்ய லஞ்சம் கேட்ட, போலி ஆவணங்கள் மூலம் பதவி மற்றும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்கள் கைது செய்ய நடவடிக்கை உதவி

உயர் அலுவலர்களால் நேர்மையாக செயல்பட்ட அலுவலர்களின் தண்டனை, பணப்பயன் நிவாரணம் பெற உதவி செய்துள்ளோம்

10000 இக்கும் மேற்ப்பட்ட முதியோர் மற்றும் திருமண உதவி கிடைத்திட உதவி
-----------------------------------------------------------

கல்விக்கடன், அநியாயமாக இழந்த சொத்துக்கள், பட்டா, சிட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும அட்டை, மின் இணைப்பு, ஓய்வுகாலப் பணப்பயன்கள், உயர் அலுவலர்கள் பழிவாங்கல், தேவையற்ற இடமாறுதல், ஊழல் கனிமத் திருட்டு போன்ற எல்லாவற்றுக்கும்

சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு

எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்

இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்
நல்லவிசயம் நாலு பேருக்கும் தெரியட்டுமே இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் நன்மக்களே!
www.facebook.com/myvoiceofindianorg

www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com

உதவி மையங்கள் பற்றிய விபரம் பெற

(0) 91 9865577021(மதுரை )
(0) 91 9443489976(வேலூர்)
(0) 91 9994658672(சென்னை)

No comments: