இந்தியன் குரல் அமைப்பு சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அரங்கம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அடக்குமுறை குறித்த மனம் புன்படியான வேதனையான நிகழ்வை உங்களுடன் பகிந்துகொள்ளவே இந்த இடுகை.
4-1-13 அன்று காலை 11 மணிக்கு
தொடங்கி பகல் 1.00 மணிவரை ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கேட்டு 2012 டிசம்பர் மாதம் 2 வது வாரம் விண்ணப்பித்தோம். அப்போதே மூத்தகுடிமக்கள் சுமார் 50 பேர் கலந்துகொள்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம்.
காவல் துறை அனுமதி அளித்தபின் அனைத்து இந்தியன் குரல் நண்பர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. அதன் படி இன்று 04-01-2013 காலை பத்துமணிக்கு நான் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் சென்றேன் பந்தல் இடுபவர் வந்து பந்தல் போடத் துவங்கினார். அப்பொழுது சென்னை மாநகர துணை ஆணையர் திரு குமார் அவர்கள் தனது வாகனத்தில் வந்து வாகனத்தில் அமர்ந்தபடியே என்னை அழைத்தார் நானும் அருகில் சென்று என்ன விவரம் என்று அறியச் சென்றேன்.
அபொழுது அவர் நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்யலாம் ஆனால் பந்தல் போடக்கூடாது நாற்காலி பயன்படுத்தக் கூடாது ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதித்தார்.
அப்போது நாங்கள் மூத்தகுடிமக்கள் எப்படி வெயிலில் நிற்பார்கள் இந்தமாதிரியான நிபந்தனைகள் குறித்து முன்னரே ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டோம். நீங்கள் முன்னரே தெரிவித்திருந்தால் நாங்கள் மாற்று ஏற்பாடு செய்திருப்போம் என்று கூறினேன். அதற்க்கு அந்த உயர் அதிகாரி நீங்கள் சொல்வது எங்களுக்கு புரிகிறது ஆனால் இந்த இடத்தில் நடத்தக் கூடாது என்று என்று நீதிமன்றம் உத்தரவு உள்ளது என்றார் அப்படியானால் ஏன் எங்களுக்கு அனுமதி அளித்தீர்கள்? இப்போது தான் சொல்கிறீர்கள் முன்னரே தெரிவிக்கவில்லையே அப்படி நீதிமன்ற உத்தரவு உள்ளது என்று முன்னரே தெரிவித்து இருந்தால் நாங்கள் வேறு இடம் கேட்டிருப்போம் என்றேன். உடனே அந்த உயர் அதிகாரி பதில் எதும்கூராமல் மற்ற காவல் துறை அலுவலர்களை அழைத்து என்னுடைய நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டு சென்று விட்டார்.
சற்று நேரத்தில் இந்தியன் குரல் அமைப்பின் தலைவர் ஐயா முனுசாமி அவர்களும் வந்துவிட்டார் அவருக்கு வயது 83 மற்ற இந்தியன் குரல் அமைப்பு நண்பர்களும் (45 வயதுமுதல் 85 வயது வரை) மற்ற துணை அமைப்பினரும் வந்துவிட்டார்கள். தலைவர் உள்ளிட்ட சில அமைப்பினர் கேட்டும் பயனில்லை.
மரத்தின் நிழலில் அமரவும் தடை
அருகில் உள்ள மரத்தின் நிழலில் நாற்காலி இட்டு அமரலாமே என்று முயற்சி செத்தோம் அதற்கும் தடை இருக்கின்றது என்று மாநகர துணை ஆணையர் தெரிவிப்பதாக காவல் துறையினர் தெரிவித்து அனுமதிக்கவில்லை.
மணி 11 ஆயிற்று காவல் துறை உறுதியுடன் இருந்தது இந்தியன் குரல் அமைப்பின் போராட்டத்திற்கு தடை விதிக்கும் வண்ணம் இந்தியன் குரல் அமைப்பின் மக்கள் நலனுக்கான் செயல்பாடுகள் முடக்கும் வண்ணம் காவல்துறை செயல்பட்டது.
மூத்த குடிமக்கள் எவ்வாறு இந்த வெய்யிலில் இருப்பார்கள் என்ற மனிதாபிமானம் கூட இந்த காக்கிச் சட்டைகாரர்களுக்கு இல்லையா? அல்லது அவர்களை ஏவி விட்டவர்களுக்கு இல்லையா?
நாம் என்ன நாற்காலியில் உட்காரவா வருகிறோம் பந்தல் கூடாதென்றால் பயந்துவிடுவோமா கலைந்துவிடுவோமோ? எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஒலிபெருக்கி இல்லாமல் பேசும் வல்லமை எங்களுக்கு உண்டு என்று அறியாமல் நிபந்தனை விதிக்கின்றார்கள்.
எங்கள் மூத்தகுடி மக்கள் மக்கள் நலனுக்காக உயிரையும் விடத் துணிந்தவர்கள் என்பதும் தகவல் உரிமைச் சட்டம் பயன்படுத்தி இலஞ்சம் ஊழலை வெளிச்சப் படுத்தியமைக்காக இந்தியன் குரல் அமைப்பின் 5 நண்பர்கள் உயிர்த்தியாகம் செய்திருக்கின்றார்கள். எங்கள் நண்பர்கள் இந்த நாட்டு மக்களுக்காக லஞ்சம் ஊழலை ஒழிப்பதற்காக பாடுபட்டமைக்கு கொலை செய்யப்பட்டார்கள் என்பதை இவர்கள் அறியவில்லைபோலும்.
இந்தியன் குரலின் ஆர்ப்பாட்டம் மிகவும் நல்லமுறையில் இந்த அடக்குமுறை தடைகளுக்கு கவலைபடாமல் அவர்களின் நிபந்தனைப்படியே நடந்து முடிந்தது. அனைத்து இந்தியக் குடிமக்களின் நலனுக்காக (இந்தியன் குரல் அமைப்பின் போராட்டத்திற்கு தடை போட்ட நண்பர்களுக்கும் அவர்களின் பிள்ளைகள் எதிர்கால நலனுக்காகவும்) தீர்மான்னங்கள் நிறைவேற்றப்பட்டது.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே........எங்கள் பாரதி
1 கருத்து:
நல்ல பதிவு
கருத்துரையிடுக