ஆதரவாளர்கள்

புதன், 2 ஜனவரி, 2013

டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக

டும் டும் ..டும்  இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக வருகிற 04-01-13 அன்னைக்கி காலை ஒன்பது மணி அளவில தொடங்கி பதினோரு மணி வரைக்கும்  சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மேமொரியல் ஹால் எதிரில பாலியல் வன்கொடுமைக்கும்
, வன்முறை கொலை கொள்ளை போன்ற சமூக குற்றங்களுக்கும்  எதிரான போராட்டம் நடக்குதுங்கோ ......கோ அனனைவரும் தவறாம கலந்துக்கணுமுன்னு இந்தியன் குரல் சார்பில கேட்டுக்குறோம் சாமியோவ் .

நன்மக்களே!
      வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை  குறித்த இந்தியன் குரல் நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உங்களை  அன்புடன் அழைக்கின்றோம்.

  தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத அதிகாரிகளை தண்டனையில் இருந்து தப்பிவைக்கும் நோக்கில் தவறான ஆணைகள் இட்டும், விண்ணப்பதாரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நீதியை வழங்காத தமிழ் நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிச்சப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

 

காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.

மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.

அரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச பாடல் காட்சிகளையும் வன்முறைக் காட்ச்சிகளையும் ஒளிபரப்பிட தடை செய்.

நாடகம் என்ற பெயரால் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உலகிற்கே கற்பு நெறி என்றால் என்ன என்று போதிக்கும் எம்குலமாம் தமிழ் குலப் பெண்களை அவமதிக்கும் நோக்கில் கள்ளக்காதல் ஒருவருடன் காதல் பல ஆண்களுடன் கள்ளக்காதல் அதிலும் கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதல் செய்வது எப்படி என்று சொல்லித்தரும் போக்கினை உடனே தடை செய்.

 மாமியாறிக் கொடுமைப் படுத்தும் மருமகள் மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார் விதம் விதமான ஐடியாக்களில் கொலை செய்வது எப்படி என்று வ்த்தியாசம் மற்றும் விரசம் வீட்டுக்குள்ளேயே எந்த நேரமும் காட்டும் தொலைக்காட்ச்சி  ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதி.

காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு  எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.
 

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும்  தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
 

 சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.


சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.

இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.

புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

 
மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது. 

நம்  கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய  நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம் 

காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

-இந்தியன் குரல் 

9444305581

கருத்துகள் இல்லை: