ஆதரவாளர்கள்

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

நேர்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் எல்லாம் சரித்திரத்தில்

தனி மனித ஒழுக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. நம் அப்பா வளர்ந்த காலம் நாம் வளரும் போது இல்லை நம்முடைய இளைய பருவம் போல் இப்பொழுது நம் பிள்ளைகளுக்கு இல்லை சூழ்நிலை மாறியிருக்கின்றது.

நம் அப்பாக்கள் இளைய பருவத்தில் பணம் பொருளை விட ஒழுக்கமே முக்கியம் பொய் சொல்லக் கூடாது திருடுதல் பாவம் பிறருக்கு துன்பம் விளைவிக்க கூடாது பிறர் பொருளை அபகரிப்பது அநாகரீகம் பெரியவர்கள் முன் அடக்கம் தேவை அதிகம் பேசக் கூட கட்டுபாடுகள் இருந்தது. பெரியோரை மதித்தல் வணங்குதல் என்பது பண்பாடு என போற்றி வளர்க்கப்பட்டார்கள் அவர்களும் அவ்வாறே வளர்ந்து பெற்றோர்களுக்கு பெருமை தேடி தந்தார்கள். நம் கலாச்சாரம் பண்பாடு காக்கப் பட்டது. அவர்களும் அவ்வாறு கட்டுபாடுடன் வளர இன்றைய தொலைக் காட்சியோ வலைதலமோ சாட்டிங் பண்ணும் வசதியோ முகம் பார்க்காமல் மணிக்கணக்காக பேசும் வசதியோ நம்முடைய நேரத்தை வீணடிக்கும் தொலைபேசி  அலைபேசி என்று எதுவும் இல்லை.ஒருமுறை சொன்னால் அவர்கள் வாழ் நாள் முழுதும் கடைபிடித்தார்கள்.

நாம் அவர்கள் வழியில் கொஞ்சம் நல்லபோதனைகள் கற்று அதை செயல் அடுத்த விடாமல் துரத்தும் இன்றைய சூழ்நிலை கலாச்சார சீரழிவு வாழ்க்கை கொஞ்சம் என்று வளர்ந்துவிட்டோம். ஆகையால் ஒழுக்கம் என்று நல்லபெயர் எடுக்கவும் நல்லவன் போல் நடிக்கவும் தெரிந்த திருட்டுத் தனமான சம்பாதிக்க தெரிஞ்ச நல்லவங்களாக ஓரளவு வாழ கற்றுக்கொண்ட இரண்டுங்கெட்டான் நிலை வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் 

இன்று நம் பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை அதை அவர்களுக்கு சொல்லி திருபத் திரும்ப பேசிப் பிரியா வைத்து அவர்களை நல வழியில் நடத்திட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் ஆனால் அதற்க்கான நேரம் நமக்கு போதுமானதாக இருக்கின்றதா பணம் பண்ணும் இயந்திரமான வாழ்க்கையில் எதை சொல்ல வேண்டும் எப்படி பட்ட புரிதல் நம் பிள்ளைகளுக்கு வேண்டும் என்று கற்றுத்தர வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கின்றது என்பதை நாம் அறிவோமா?
நம் பிள்ளைகள் எது கேட்டாலும் வங்கித் தரவேண்டும் அதற்க்கு பணம் வேண்டும் என்று பணம் பண்ணும் வேலையை மட்டும் செய்கிறோம்.
அதற்காக நாம் நல வழியை பின்பற்றுகிறோமா இல்லை நேர் வழியில் பொருள் ஈட்டுகிரோமா என்பது முக்கிய கேள்வியாகிறது நாம் நல்வழியில் நடந்தால் மட்டுமே நம் பிள்ளைகளுக்கு நல்ல வழியை கற்றுக் கொடுக்க முடியும் என்பதை அறிவோமா.

நேர்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் எல்லாம் சரித்திரத்தில் இடம் பிடித்து இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் ஆனால் அவர்களை பிளைக்கத்தேரியாதவர்கள் என்று ஏளனம் செய்து நாம் புத்திசாலியாக காட்டிக்கொள ஒரே வலி பொருளாதாரத்தில் வளர்வது என்று முடிவுசெய்து ஓடிக்கொண்டு இருக்கின்றோமே நம் பாதை சரியானதுதான் என்று மனத்தால் கூற முடியுமா?
இவ்வாறு நாம் சேர்க்கும் பணம் என்ன நிலையானது தானா நிலையான புகலி பெற்றவர்கள் பிழைக்க தெரியாதவர்கள் நிலையற்ற செல்வத்தைப் பெற்றவர்கள் புத்திசாலிகள் அறிவாளிகள் என்று மார்தட்டிக்கொள்ளும் வீணர்களே நாம் அனைவரும் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள் நம் தாத்தா சேர்த்து வைத்த பொருளில் தான் நம் அப்பா அம்மா வாழ்ந்தார்களா நாம் நம்முடிய அபா அம்மா சேர்த்து வைத்துள்ள பொருளை செலவு செய்கிறோமா/ அவையெல்லாம் யாரும் அன்பவிக்க செலவு செய்ய முடியாமல் இருக்கும் பொது நாம் நம் பிள்ளைகளுக்கு தேவைக்கு மேல் ஏன் சேர்த்து வைக்க வேண்டும் என்று சொல்லி தவறான வழியில் சேர்த்து முடக்கி வைக்க வேண்டும் . அவர்களின் வாழ்க்கை நலம் பெற நல்ல கல்வி பெரும் அளவுக்கும் அவர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றா அதன் வரைக்கும் நல வழியில் செக்கும் பொருள் போதுமானதே
நாம் நல வழியில் பொருள் சேர்க்காமல் தவறான வழியில் சேர்க்கும் பொது நாம் நம் பிள்ளைகளைக் கேட்கும் தகுதியை இழக்கின்றோம் அவர்கள் தவறுகளைக் கண்டிக்கும் திராணி நமக்கு இருப்பதில்லை ஆகவே அவர்கள் செய்யும் தவறுகளை திருத்தவும் கண்டிக்கவும் நமக்கு உரிமை இருப்பதில்லை குற்ற உணர்வால் நாமும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை ஆதலால் நம் பிள்ளைகளின் எதிகாலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கு உழைத்த நாமே அவர்களை படுகுழியில் தள்ளிவிடுகிறோம் என்பதை கண் கேட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யும் நிலை போல் நமக்கும் நம் பிள்ளைகள் தவறான பாதையில் மனிதாபிமானம் அற்ற நிலையில்அடங்காமை நிலை தறிகெட்ட நிலை ஊதாரித் தனம் என்று தெரிந்தி மனத்தால் அழுதும் உதட்டால் சிரித்தும் புழுங்கி புழுங்கி வாழ்ந்து மடியும் வரை நினைத்திருப்போம் முதியோர் இல்லங்களும் ஆதரவற்றோர் இல்லங்களும் பெருகும் நம் அன்பவத்தைக் கூட நம் பிள்ளைகளுக்கு சொல்ல முடியாமலேய இறந்தும் விடுவோம் நமால் சரியாக வார்க்கப் படாத பிள்ளையால் சமஊகம் கெடும் அந்த சமூகத்தில் நம் பிள்ளையும் பிள்ளைபெற்று வளர்ப்பான் அவர்கள் என்னத்தை சொல்லி வளர்ப்பார்கள் என்பது அவர்கள் பிள்ளைகள் எப்படி வளர்வார்கள் அவர்கள் சார்ந்த சமூகம் எப்படி இருக்கும் என்பது நம் பிள்ளைகள் வாழ்வு முடியும் நிலையில் அவர்கள் சொன்னால் தான் தெரியும் அதக் கேட்க்க நாமும் இல்லை நம் பிள்ளையின் பிள்ளைகளும் கேட்க தயாராக இருக்க மாட்டார்கள் 

1 கருத்து:

S. Arul Selva Perarasan சொன்னது…

//நாம் நல வழியில் பொருள் சேர்க்காமல் தவறான வழியில் சேர்க்கும் பொது நாம் நம் பிள்ளைகளைக் கேட்கும் தகுதியை இழக்கின்றோம் //

நல்ல அனுபவ வரிகள்.