ஆதரவாளர்கள்

சனி, 17 மார்ச், 2012

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 விண்ணப்பத்திற்கு 30 தினங்களில் பதில் இல்லையா நுகர்வோர் சட்டம் பொருந்தும்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 விண்ணப்பத்திற்கு 30 தினங்களில் பதில் இல்லையா நுகர்வோர் சட்டம் பொருந்தும்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986  எப்படிநுகர்வோர் மன்றத்தில் மனு செய்வது /

1    சம்மந்தப்பட்ட பொது தகவல் அலுவளுருக்கு  முப்பது தினங்களில் பதில் வரவில்லை என்று சட்ட அறிவிப்பு செய்தல் வேண்டும்
சட்ட அறிவிப்பு செய்யாமலும் மனு செய்யலாம்


2 மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு மன்றத்தில் மனு செய்தல்

       மனுதாரர் பெயர் முகவர்
      எதி மனுதாரர் பெயர் முகவரி
3 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986  இன் கீழ் மனு தாக்கல் செய்யப்படுகிறது
4 இழப்பு மற்றும் செவைக்குரிபாடு விபரம்
5 சேவைக்குறைபாடு பற்றி புகர் மற்றும் அதற்கு நான் மேற்கொண்ட முயற்சி
6       என்ன தீர்வு வேண்டும்
7  ஆதாரங்களின் விவரம் இணைப்பு செய்துள்ள விபரம் பக்க எண்கள்
8 தீர்வான தீர்வாக என்ன வேண்டும் என்ன என்ன வகையில் பாதிப்பு நஷ்டம் மன உளைச்சல் தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் விண்ணப்பித்து முப்பது நாட்களுக்குள் பதல் வரவில்லை சட்டப்படி அது செவக்குரைபாடு இதுபோன்று இதற்க்கு முன் பதிவு செய்த , தீர்ப்பளிக்கப்பட்ட விவரங்களின் மேற்கோள் இதை கவனமாக எழுத் வேண்டும் இதில் கடைசியாக மேலும் இந்த செவைக் குரைபாட்டிற்கு இழப்பாக மன்றம் கருதும் பிற இழப்பீடும் வழங்கிட வேண்டுகிறேன் என்று முடிக்கவேண்டும்  அப்பொழுது தான் நாம் கேட்க தவறிய அல்லது குறைவாக கேட்டுள்ள போதும் நீதிமன்றம் நினைக்கும் அதிகப்படியான தீர்வை தரும் உதாரணமாக நாம் ஆயிரம் ருபாய் இழப்பீடு வேண்டும் என்று கேட்டிருந்தால் அந்த வழக்கிற்கு அதிகப்படியான இழப்பு வழங்க வாய்ப்பிருப்பின் நீதி மன்றம் தீர்ப்பில் அதிக தொகை நிர்ணயம் செய்து தீர்ப்பளிக்கும் .
9  தமிழ் மொழி சட்டம் ஆட்சிமொழி  சட்டம் பிரிவு 4  இன் படி எனது வழக்கை தமிழில் நடத்த வேண்டும் எனக்கு வழங்கும் கடிதங்களை தமிழில் தரவேண்டும் என்று கோருகிறேன்
10  மேற்குறிப்பிட்ட அனைத்தும் உண்மையென்றும் என் சம்பத்தப்பட்ட விவரங்கள் யாவும் உண்மையென சான்றளிக்கிறேன்

இணைப்பு .....................................................................தங்கள் உண்மையுள்ள




கையொப்பம் இட்ட அசல் நகல்கள் மூன்றும் அத்துடன் எதிர் மனுதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று  சேர்த்து மொத்தம் எத்துணையோ அத்துணை நகல்களும் பச்சை கலர் தாளில் அச்செடுத்து மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
அத்துடன் அஞ்சல் தலை ஒட்டிய கவர் எதிர்மனுதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பஇணைத்து கொடுக்கவும்
.............................................................................................................................................


வழக்கு நடைபெறும் போது கவனிக்க வேண்டியவை

நீங்கள் விண்ணப்பித்த மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் வழக்கு என் இடப்பட்டுவிடும் வழக்கு என் இடப்பட்ட உடனேய வாய்தா தேதியும் பதிவு செய்யப்படும் சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் விசாரணைக்கு அழைத்து எதிமனுதாரர் அவகாசம் கொடு என்று வாய்தா கேட்டால் கடுமையான ஆட்சேபனை தெரிவிப்பதுடன் நான் வழக்கை நடத்த தயாராக உள்ளேன் என்றும் அப்படியும் வாய்தா வழங்குவ தாயின் இன்று என் சம்பளம் எனக்கு ஏற்ப்பாடு இழப்பு நான் இவ்வளவு தொலைவில் இருந்து வருகிறேன் வயதானவராக இருந்தால் என்வயத்தின் நிலை செலவினங்களைக் குறிப்பிட்டு தள்ளி வைக்க படும் வாய்தாவிற்கு எதிர் மனுதாரரிடம் ருபாய் ஐநூறு இழப்பீடாக பெற்றளிக்க கோரிக்கை வைக்க  வேண்டும் நிச்சயமாக கிடைக்கும்
அத்துடன் வழக்கை விரைந்து முடிக்க வாய்தா வார வாரம் போட கோரிக்கை இடவேண்டும் ஒவ்வொரு வாய்தாவிர்க்கும் எதிர் மனுதாரர் ஐநூறு கொடுத்து வாய்தா வாங்க மாட்டார் ஆகவே வழக்கு விரைவில் முடிவிற்கு வரும் ஒவ்வொரு வாய்தாவின்போதும் அடுத்த வாய்தா தேதியை நீதிபதி அறிவிப்புசெய்வார் காது கேட்கவில்லையெனில் பதிவாளரிடம் அன்றே கேட்டு குறித்துக்கொண்டு செல்ல வேண்டும் எந்த காரனத்திர்க்காகவும் ஆஜர் ஆகாமல் நாம் இருக்க கூடாது மீறினால் வழக்கு வலுவிழக்கும்  மேலும் விபரம் அறிய தொடர்புக்கு 9444305581 . 

கருத்துகள் இல்லை: