ஆதரவாளர்கள்

வியாழன், 3 ஜூலை, 2014

இப்படியும் வாழ்த்தலாம்

 
எந்த ஒரு விழாவானாலும் அன்பளிப்பாக  உறவினர்களுக்கு வழங்குவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . விழா நடத்தும் இல்லத்தினரோ அல்லது அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நண்பர்கள் உறவினர்கள் இதுபோன்று அச்சிட்டு அளிக்கலாம் 
சங்கங்கள் ஆண்டுவிழா, நண்பர்களின் திருமணம் , பிறந்தநாள்விழா,  கலை அரங்கேற்றம், பனி விடை விழா , புதிய கடை திறப்பு  போன்ற  விழாக்களில் நிகழ்வில் வாழ்த்து மடலுடன் தகவல் சட்ட விழிப்புணர்வு கையேடு வழங்குவது என்பது மிகச் சிறந்த அறம் ஆகும்.

ஒரு புத்தகம் அச்சிட செலவு அதிக பட்சம் 2 ரூபாய் தான் ஆகும். ஒரு திருமண விழாவில் நாம் குறைந்தபட்சம் 100 ரூபாய் அன்பளிப்பு செய்வோம் அதற்க்கு பதில் நான்கு நண்பர்கள் இணைந்து தங்களின் பெயரில் அல்லது தான் சார்ந்த அமைப்பின் பெயரில் அச்சிட்டு கொடுப்பது மிகச் சிறந்த பணியாகும்
இந்த பிரசுரம் யாருக்காவது ஒரு நபருக்கு பயன் அளித்தாலும் அந்த விழாவின் நாயகர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்து கிடைக்கும். விழாவையும் விழா நாயகர்களையும் பயனடைந்தவர் அவர்கள்தம் வாழ்நாள் முழுதும் நன்றியுடன் நினைத்திருப்பார்கள். 
ஆகவே இந்த முயற்ச்சியில் அனைத்து மாவட்ட நண்பர்களும் செய்வது விரைவான நலன் பயக்கும்
விழா நடத்தும் வீட்டார்கள் அவர்களின் விழாவுக்கான செலவில் ஒரு பங்கை இதற்காக செலவிட்டால் நாளை நாடு அவர்களை வணங்கும் 
பால சுப்ரமணியன் 
இந்தியன் குரல்
==========================
தகவல் உரிமை சட்டம் இருக்க இலஞ்சம் ஏன்?

சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு 

எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம் 

இந்தியன் குரல் இலவச உதவிமையங்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்படுகின்றது 
பயிற்சிக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ள ;
பிரதி மாதம் 1 ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி காலை 10 மணிக்கு கும்பத் காம்ப்ளக்ஸ் , 29, ரத்தன் பஜார் சென்னை 3 பூக்கடைக் காவல் நிலையம் எதிரில் தொடர்புக்கு 9444305581, 9994658672,94489976

தமிழ்நாடு தென்மாவட்ட மக்கள் தொடர்புகொள்ள இந்தியன் குரல் தென்மண்டலம் 

 9865577021, 9443930300,9751846069

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 

சட்டத்தின் நோக்கம் ;
1) அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவு மறைவற்ற நிலையைக் கொண்டு வருதல் 
2) அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3) அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடிமக்களுக்கு , அதை அளிக்க வகை செய்வதோடு, ஊழலை ஒழித்தல்.
4) அரசு மற்றும் அறுசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக்காத்தல்.

மனுக்களை யாருக்கு அனுப்புவது ?
ஒவ்வொரு அரசு அலுவக்ளக்த்திலும் பொது தகவல் அலுவலர்  மற்றும் மெல்முறையீட்டு அலுவலர் இருப்பார்கள் அவர்களுக்கு தான் மனு செய்ய வேண்டும். நீங்கள் விரும்பும் தகவல் எந்த அலுவலகத்தில் இருக்கின்றது என்று தெரியாவிட்டால் பொது தகவல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ..............மாவட்டம் அவர்களுக்கு மனு செய்யலாம் அவர் அதை  ஐந்து தினங்களில நீங்கள் கோரும் தகவல் எந்த அலுவலகத்தில் இருக்கின்றதோ அந்த அலுவலகத்திற்கு உங்கள் விண்ணப்பத்தினை அனுப்பி தகவல் தர உத்தரவிடுவதுடன் அதன் விபரம் மனுதாரருக்கு அனுப்பிட பிரிவு 6(3) இன் கீழ் இச்சட்டத்தில் வகையும் செய்யப்பட்டுள்ளது

கட்டணம் 

தகவல் கேட்டு விண்ணப்பத்துடன் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் மாநில அரசு அலுவலகமாக இருந்தால் 10 ரூபாய் மதிப்புக்கு  நீதிமன்ற வில்லையகவும் மத்திய அரசு சம்பந்தமான அலுவலகத்தில் இருக்கும் தகவல் பெற பத்து ரூபாய் போஸ்டல் ஆர்டர் இணைத்தும் அனுப்பவேண்டும். கேட்கும் தகவல் நகலெடுக்க கட்டணம் ஒரு பக்கத்திற்கு இரண்டு ரூபாய் வீதம் கட்டணம் கேட்டால் செலுத்தவேண்டும், மனு  கிடைக்க பெற்று  30 தினங்கள் கழித்து அலுவலர் நகலுக்கு கட்டணம் கேட்டால் செலுத்தத் தேவையில்லை இலவசமாக தரவேண்டும்.


தகவல்  தர மறுத்தால் தண்டனை 
தகவல் சட்டத்தில்  கேட்டல் 30 தினங்களில் தகவல் தரவேண்டும் தகவல் அளிக்கத் தவறும் பொது தகவல் அலுவருக்கு நாள் ஒன்றுக்கு 250 வீதம் திகபட்சம் 25000 வரை அபராதமும் துறை நடவடிக்கை எடுக்கவும் இச்சட்டம் வகை காண்கிறது. துறை நடவடிக்கை எடுக்க பனி இடைநீக்கம் செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அலுவலர்களின் பணப்பயங்களை நிறுத்தி வைக்கவும் ஆணையிட முடியும்.

இச்சட்டம் பயன் 
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன் சுயமரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல், இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல், இலஞ்சம் தராமல், இருந்த இடத்தில் இருந்தே தன குடும்பத் தேவைகள் மற்றும் கீழ் காணும் மத்திய மாநில அரசின் பயன்களைப் போன்று அனைத்து நலன்களையும் தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 ஐ பயன்படுத்தி பெறலாம்.

விண்ணப்பம் வழங்க மறுக்கும் வங்கிகளில் இருந்து கல்விக்கடன் மற்றும் படித்த பட்டதாரிகளுக்கான தொழில் கடன் 

குடும்ப அட்டை, வாக்களர் அடையாள அட்டை, பிறப்பு சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகள், முதியோர் ஓய்வூதியம், கைம்பெண்கள் , இரண்டு பெண்குழந்தைகள் திட்டம், திருமண உதவி, இரண்டு பெண்குழந்தைகள் திட்டம் பயன் பெற, பிற்படுத்தப் பட்டோர் கல்வி உதவி தொகை ஆதிதிராவிடர் பழங்குடியினர் கல்வி உதவி தொகை பெறுதல், இலவச வீடு , மின் இணைப்பு  உள்ளிட்ட அனைத்து அரசு பயன் பெற
பட்ட பெயர் மற்றம், உட்பிரிவு செய்து பட்ட பெற, சிட்டா, பத்திரப் பதிவு உள்ளிட்ட பயன்களைப் பெறுதல். நிலா அவனம் பெறுதல், தனியார் நிலம் ஆக்கிரமனங்கள், அரசு நிலங்கள் அகிரமணம், ஆறு ஏறி குளம் பராமரிப்பு, உர மணியம் விதைநெல், சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட  விவசாய பயன்பாடு, விவசாயக் குழந்தைகளுக்கான கல்வி உதவி, தொழிலார்கள் காப்பீடு அவர்கள் தம் பிள்ளைகள் கல்விக்கு உதவி, தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகள் நலன் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு உதவி இதுபோன்று இன்னும் இருக்கும் அனைத்து உதவிகள்  

பட்டதாரிகள் தொழில் துவங்கிட வங்கி கடன், சிறுதொழில் குறுந்தொழில் உள்ளிட்ட பிறவகை தொழில்கள் துவங்க அனுமதி, கைத்தொழில் சுயதொழில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான அரசு பயன்கள் உள்ளிட்ட அனைத்து மத்திய மாநில அரசுப் பயன்களையும் பெற முடியும் 

ஊழல் அலுவலர்களின் சொத்து, ஊழல் புகார்கள், காவல் நிலையைப் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அரசு அலுவலர்களின் பணிகள் என்ன என்று அறிந்து கொண்டு தேவைகளை பெற முடியும்,

தனியார் பள்ளிகளில் 25 சதம் மாணவர்களுக்கு இலவசக் கல்வி பெற கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வகை செய்கின்றது. பயன்பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அந்த பள்ளிகளுக்கு அரசாங்கமே நேரடியாக செலுத்திவிடும் விபரம், எவ்வாறி மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது விண்ணப்பிக்கும் முறைகள் எங்கே எப்படி விண்ணப்பம் அளிக்கவேண்டும் உள்ளிட்ட அனைத்து பயன்களையும் பெறலாம்.

அரசியல் கட்சிகளையும் கேட்கலாம்;

 ஒவ்வொரு அரசியல் கட்சியும் கட்சிப் பதவி, வேட்பாளர் தேர்வு, நன்கொடை வரவு, வரவு செலவு , தீர்மானங்கள், ஆண்டறிக்கை நகல் உள்ளிட்ட கட்சி அன்றாட நடவடிக்கைகள் வரை கேட்கலாம்.

தனியார் அமைப்புகளையும் கேட்கலாம் ;

பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் , வியாபார நிறுவனங்கள் போன்ற அமைப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளை அதன் தொடர்புடைய அரசு அலுவலகம் மூலம் கேட்கலாம்

கோரிக்கை மற்றும் புகார்கள் மீது; 
அரசு அலுவலகங்களில் அளித்த கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம் கேட்டுப் பெறலாம். மனுக்களை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் அலுவலர் பதவி பெயர் அலுவலக முகவரி கேட்கலாம் உரிய காலத்தில் தீர்வு செய்யாத அலுவலர் மீது புகார் பெற்று நடவடிக்கை எடுக்கும் உயர் அலுவலர் பதவி பெயர் அலுவலக முகவரி பெறலாம். வரும் தகவல்கள் மூலம் உரிய மன்றத்தில் புகார் செய்து நிவாரணம் பெறலாம்.
முறைகேடுகள் நடவாமல் தடுக்க, அரசு வீடுகள் பெற்ற பயனாளிகள் விபரம், கிராமப்புற பசுமை வீடுகள் திட்டம் பயனாளிகள் விபரம் போன்ற அனைத்து திட்டங்களின் பயனாளிகள் விபரம், சாலை வசதி, தெருவிளக்கு, ஆறு, ஏரி, குளம் பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, அரசு மருத்துவ மனைகள் செயல்பாடு உள்ளிட்ட பொது பயன்களுக்க்காகவும்  தகவல் சட்டம் மூலம் நிவாரணம் பெறலாம்.

மனுக்கள் எழுதுவது எப்படி
எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இந்தியா முழுவதும் உள்ள எந்த ஒரு அலுவலகத்திலும் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்யலாம். நகர சுத்தித் தொழிலாளி முதல் பிரதமர் வரை கடைநிலை ஊழியர் முதல் ஜனாதிபதி வரை யாரிடமும் தகவல் கேட்கலாம், 


அனுப்புனர் முகவரி , 
பொது தகவல் அலுவலர்
 தகவல் உரிமைச் சட்டம் 2005,
 ..............அலுவலகம்,
 ............... மாவட்டம் 
பின்கொடு .............  என்று முகவரி இட்டு 

நீங்கள் கேட்க விரும்பும் தகவல்களை வரிசையாக எழுதி கையப்பம் இட்டு தேதி குறிப்பிட்டுவிட்டு கட்டணம் மாநில அரசு அலுவலகங்களுக்கு நீதிமன்ற வில்லை தலைப் பக்கத்தில் ஓட்டிவிட்டு பிறகு நகல் எடுத்து வைத்துக் கொண்டு விண்ணப்பத்தை பதிவு அஞ்சலில் ஒப்புகையுடன் அனுப்பிடல் வேண்டும். மத்திய அரசு அலுவலகம் என்றல் விண்ணப்பத்துடன் போஸ்டல் ஆர்டர் இணைத்து ந்கையோப்பம் இட்டு நகல் எடுத்து வைத்துக்கொண்டு பிறகு பதிவு அஞ்சலில் ஒப்புகையுடன் அனுப்பிடல் வேண்டும்.

தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் மட்டுமே கேட்க வேண்டும்
 கேள்விகள் கேட்கக் கூடாது. ஆலோசனையாகவோ புகார், மற்றும் கோரிக்கையாக இருக்கக் கூடாது.அப்படி மனுக்கள் இருந்தால் பொது தகவல் அலுவலர் தகவல் தரலாம் அல்லது தராமலும் இருக்கலாம். தகவல் மட்டுமே கேட்பதுதான் சரியான தகவல் சட்ட விண்ணப்பம் ஆகும்
தகவல் சட்டம் மூலம் அலுவலக கோப்புகள் நகல், மனுக்களின் நகல்கள், அரசு ஆணை, உத்தரவுகள், அறிவுறுத்தல்கள் கடிதங்கள்,ஆவணங்கள், அலுவலக குறிப்புகள் குரிப்புகட்டுகள் தாருங்கள் என்று நீங்கள் விரும்பும் தகவல் தகவல் எந்த வடிவத்தில் எந்த கோப்பில் இருக்கின்றதோ அந்தக் கோப்பின் நகல், ஆணையின் ஒளிநகல் என்று தான் கேட்க வேண்டும். 


மேல் முறையீடு 
நீங்கள் அனுப்பிய தகவல் விண்ணப்பம் அலுவலகத்தில் கிடைக்கப் பெற்ற தேதியில் இருந்து 30 தினங்களில் தகவல் அளிக்கவில்லை என்றாலோ குறைபாடுடைய தகவல் அளித்திருந்தாலோ தகவல் தர மறுத்து இருந்தாலும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திராமல் முதல் மேல்முறையீடு விண்ணப்பம் மேல் முறையீட்டு அலுவலர் தகவல் உரிமைவ்ச் சட்டம் ................முகவரி (நீங்கள் முதலில் எந்த அலுவலகத்தில் தகவல் கேட்டு இருந்தீர்களோ அதே அலுவலக முகவரியை) இட்டு உங்கள் மனு செய்த தேதியில் இருந்து 35 நாட்களுக்கு பிறகு 45 தினங்களுக்குள் மேல்முறையீடு அனுப்பிடல் வேண்டும்.

இரண்டாவது மேல் முறையீடு ; 


முதல் மேல்முறையீடு செய்து 30 தினங்களில் தகவல் இல்லையென்றால், குறைபாடுடைய தகவல், தகவல் மறுப்பு என்றாலும் யாருக்காகவும் எதற்காகவும் காத்திராமல் இரண்டாம் மேல்முறையீடு ஆணையத்திற்கு அனுப்பிட வேண்டும். உங்களது முதல் மனு தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் ஆணையத்தின் உள்ளே உங்களது முறையீட்டு விண்ணப்பம் சென்றுவிடுமாறு அனுப்பிடல் வேண்டும்

அனைத்து கடிதங்களும் ஒப்புகையுடன் பதிவு அஞ்சலில் அனுப்புதல் அவசியம் தகவல் சட்ட விண்ணப்பங்களுக்கு நினைவூட்டல் கடிதம் ஏதும் அனுப்பிட தேவையில்லை.

எங்கள் உதவிக்கு 

அலைபேசி மூலம் உதவிக்கு கலை 11 மணி முதல் பகல் 12 மணி வரியும் மல 4.30 மணி முதல் 6.00 மணி வரையும் அழைக்க 9444305581, 9443489976
இந்தியன் குரல் அமைப்பு நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் சந்தா வாங்குவதும் இல்லை எந்த சேவைக்கும் கட்டணம் பெறாமல் தகவல் சட்டம் பயன்பாடு மற்றும் மனுக்களை தயாரிக்க கிடைக்கும் தகவல் சரியானது தான் அல்லது குறைபாடு உடைய தகவல் என்று ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க பயிற்சி அளிக்கின்றது உதவி மையம் மூலம் மனுக்களை எழுத உதவியும் செய்கின்றது.

இந்தியன் குரல் அமைப்பு 80 வகையான மாதிரி விண்ணப்பங்களுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி தகவல் தராத அலுவலர் மீது நுகர்வோர் மன்றத்தில் வழக்குவழக்கறிஞர் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்து இழப்பீடு பெறுவது உள்ளிட்ட விபரங்களுடன் இது தான் தகவல் உரிமைச் சட்டம் புத்தகம் வெளியிட்டு இருக்கின்றது உதவி மையங்களில் மட்டும் கிடைக்கும். 
- எ.பாலசுப்ரமணியன் இந்தியன் குரல் சென்னை 9444305581.
பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து இருந்தால், குடும்ப அட்டை கேட்டு கோரிக்கை விண்ணப்பம் இது போன்று உங்களது கோரிக்கை மனுக்கள் தீர்வு இல்லாமல் இருந்தால்
மாதிரி விண்ணப்பம்
தகவல் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1) இன் கீழ் விண்ணப்பம் 

தேதி 
பதிவு அஞ்சல் ஒப்புகையுடன்.
அனுப்புனர் ,
 பெயர் முகவரி
..............................
.............................

பெறுநர் 
பொது தகவல் அலுவலர் 
தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 
----------------------------------அலுவலகம்
------------------------------
--------------------- ------------மாவட்டம்
ஐயா 
தங்கள் துறையிடம் வைக்கப்பட்ட எனது கோரிக்கையின் சுருக்கம் (ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்  )
கோரிக்கை மனு அனுப்பிய அஞ்சல் விவரங்கள் ( மனு தேதி யருக்கு அனுப்பப்பட்டது அஞ்சல் எண் )
மேற்ப்படி எனது கோரிக்கை மனு மீது தங்கள் துறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தங்கள் துரையின் செயல்பாடுகள் குறித்தும் கீழ்கண்டவாறு தகல் அளிக்க கேட்டுக் கொள்கின்றேன்
1. மேற்க்கண் எனது விண்ணப்பத்திற்கு எண் அளிக்கப்பட பகிர்ம்னப் பதிவேட்டின், பதிவு செய்யப்பட்ட தன் பதிவேட்டின், பதிவு அஞ்சல் பதிவேட்டின், சிறப்பு பதிவேட்டின் சம்பந்தப்பட்ட பக்கங்களின் ஒளிநகல்.
2) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது எந்த அலுவலர் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனு ஆணையின் ஒளி நகல்.
3) மேற்காணும் எனது விண்ணப்பத்தின் மீது விசாரணை செய்த அலுவலர் பதவி பெயர் அலுவலக  முகவரி விசாரணை செஇததெதிகல், அந்த நாட்களின் நாட்குறிப்பு.
4) மேற்காணும் எனது கோரிக்கையின் மீது எத்துனை நாட்களுக்குள் இறுதி ஆணை பிறப்பிக்கப் படவேண்டும் .என்ன காரணங்களால் நிறுத்திவைக்கலாம் , நிராகரிக்கலாம் என்று காட்டும் அணையின் ஒளிநகல்.
5) மேற்காணும் எனது வின்னப்ப்த்திக் கையாண்ட தங்கள் அலுவலகக் கோப்பின் அனைத்து பக்கங்களின் ஒளிநகல் குறிப்புக் கட்டுடன்.
6) நிணயிக்கப்பட்ட காலத்திற்குள் தீர்வு செய்யாத அலுவலர் மீது புகார் பெற்று நடவடிக்கை எடுக்கவேண்டிய அலுவலர் பெயர் பதவி அலுவலக முகவரி.
7) தங்கள் துரையின் மாவட்ட கொட்ட மண்டல அளவிலான அலுவலர்களின் அரசு செல்பேசி எண்களின் பட்டியல்.
எனக்கு இணையதள வசதியும் திறமையும் இல்லை. கொரியத் தகவல்களை அஞ்சலில் அனுப்பி வைக்கக் கோருகின்றேன். தங்கள் கவனம் சட்டப்பிரிவு 6(3), மற்றும் 19(8) க்கு கோருகின்றேன். இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமான 10க்கான நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டப்பட்டுள்ளது என்றும் கனிவுடன் தெரிவித்துகொள்கின்றேன். 
தங்கள் உண்மையுள்ள
(..................)
தேதி ........
--------------------------------------------------------------------------------------------------
முதல் பக்கம் அட்டையில் இணைப்பில் பார்க்க இணைப்பு மதல் பக்கத்தில் 1/4 பங்கில் அச்சிடும் அமைப்பு அல்லது தனி நபர் பெயர் முகவரி போட்டு அட்டை இருத்தல் நலம்
புத்தகத்தின் முன் பக்கம் விழா நாயகர்களின் புகைப்படத்துடன் நிகழ்ச்சி குறித்து இருப்பதும். 

பின்பக்கம் அட்டையில் விழா நடத்துனர்களின் குடும்ப புகைப்படமோ அல்லது வாழ்த்தும் நண்பர்களின் புகைப்படமோ குழுவாக இருந்தால் சிறப்பு
A 4 பேப்பரில் நான்காக மடித்தால் என்ன அளவு வருமோ அந்த அளவில் பாக்கெட்டில் வைக்குமளவு புத்தகமாக செய்யலாம்

பாலசுப்ரமணியன் 
இந்தியன் குரல் 
9444305581


கருத்துகள் இல்லை: